Click here to get Discounts at Amazon
Click here to get Discounts at Amazon
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள் என்று தவிப்பும் புலம்பலுமாகத்தான் அனைவரது வாழ்க்கையூம் இருக்கிறது.இதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றுதான் கோவில்களுக்குச் செல்வதும் ஜோதிடரிடம் ஜாதகத்தைக் காட்டி பரிகாரங்களைப் பெற்றுக் கொள்வதும் ஆகும்.
பரிகாரங்களை சரியான முறையில் துல்லியமாகப் பெறுவது மிக முக்கியம்.கட்டணம் குறைவாக இருக்கிறதே என்று கூட்டமாக மக்கள் கூடுமிடங்களில் பெறுகின்ற பரிகாரம் என்பது அந்த ஜோதிடர்கள் அந்த நேரத்தில் பிரச்சனை மேம்போக்காக சரியாகப் போகட்டும் என்று கொடுக்கிறார்கள்.அது உடனடியாக வேலை செய்வது போல தோன்றினாலும் பிறகு வேலையைக் காட்டி விடும்.
சரி போகட்டும்.
யாருக்கெல்லாம் பரிகாரங்கள் வேலை செய்யாது என்று ஒரு லிஸ்ட்டே போடலாம்.
1.மனைவியை திட்டிக் கொண்டே இருப்பவர்கள்.வீட்டிலுள்ள பெண்களை மதிக்காதவர்கள்.
2.சகோதரர்களிடம் விரோதம் பாராட்டுபவர்கள்.பொறாமைப்படுபவர்கள்.
3.அடுத்தவர் வளர்ச்சியைப் பார்த்து வயிற்றெரிச்சல் கொண்டவர்கள்.
4.கோவில்களில் முண்டியடித்து குறுக்குவழியில் செல்பவர்கள்.
5.வீட்டில் குப்பையூம் கூளமும் முடிகளும் சேரவிட்டிருப்பவர்கள்.
6.பாத்ரூமை சரியாகப்பராமரிக்காமல் வைத்திருப்பவர்கள்.
7.நன்றி மறந்தவர்கள்.
8.பெற்றௌரை தவிக்கவிடுபவர்கள்.
9.குருவையூம் ஆசிரியர்களையூம் ஜோதிடர்களையூம் மதிக்காதவர்கள்.
10.சுத்தமில்லாத ஆடைகளை அணிபவர்கள்.
இவை அனைத்தும் நீங்கள் என்னவிதமான வலுவானப் பரிகாரங்களைச் செய்தாலும் அந்த பரிகாரங்கள் உங்களை வந்தடையாமல் தடுத்து விடும்.எனவே உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
Click here to get Discounts at Amazon
Click here to get Discounts at Amazon
ConversionConversion EmoticonEmoticon