ஜோதிடரீதியாக ராகுவின் பிடியிலும் சனியின் பார்வையிலும் சிம்ம ராசியில் சிக்கிக் கொண்டிருந்த குரு பெயர்ச்சியாக கன்னி ராசியில் அமர்ந்து விட்டபடியால் இன்னும் ஒராண்டிற்கு தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் பெரிய மாற்றம் வரப்போகிறது.
தன் வீட்டை தானே குரு மீனத்தில் பார்ப்பதாலும் தனது பார்வையை சுக்கிரனின் வீடானா ரிஷபத்தின் மீது பதிப்பதாலும் வரும் ஒரு வருடத்தில் பத்து கிராம் எடையூள்ள 24 கேரட் தங்கத்தின் விலை ரூ 34000க்கும் மேலாக (தற்போதைய விலை ரூ 32000 ஆகும்) உயரப்போகிறது.அதே போல ஒரு பார் வெள்ளியின் விலை ரூ 51000 வரை (தற்போதைய விலை ரூ 49670 ஆகும்) உயரப்போகிறது.
இங்கே ஒரு சந்தேகம் எழலாம்.என்னதான் குரு தனது பார்வையை ரிஷபத்தின் மீது செலுத்தினாலும் ரிஷபராசி நாதனான சுக்கிரன் குருவிற்கு பகை கிரகமாயிற்றே.பகை கிரகத்தின் மீது செலுத்தும் பார்வை எப்படி விலை உயர்விற்கு வழி வகுக்கும் என்று கேட்கலாம்.அதனால்தான் இப்படி புரிந்து கொள்ள வேண்டும்.தங்கத்தின் விலை உயர்ந்தால் அதன் பக்க விளைவாக தானாக வெள்ளியின் விலையூம் உயரத்தான் செய்யூம்.ஆனால் சீனாவில் வெள்ளின் தேவைப்பாட்டில் அவ்வப்போது ஏற்படும் ஏற்ற இறக்கம் கமாடிட்டி சந்தையில் வெள்ளியின் விலையில்; மிகக் கடுமையான ஏற்ற இறக்கத்தை தருவதோடு கமாட்டி டிரேடர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான பணம் தரும் ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங்கையூம் இந்த வருடம் தரப்போகிறது.
ConversionConversion EmoticonEmoticon