எல்லோருடைய ஜாதகத்திலும் எல்லா கிரகங்களும் ஆதிக்கம் செலுத்தத்தான் செய்யூம் என்றாலும் அதில் குறிப்பிட்ட சில கிரகங்களுக்கு முக்கியத்துவம் உண்டு.உதாரணமாக குரு சுக்கிரன் சனி செவ்வாய் போன்ற கிரகங்களைக் குறிப்பிடலாம்.
நீங்கள் ஈடுபடும் துறையில் அல்லது தொழிலில் அல்லது வணிகத்தில் நீங்கள் மார்க்கெட் லீடராக அதாவது தலைமையிடத்தில் இருப்பீர்களா அல்லது அந்த துறையில் நீங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு பணம் சம்பாதித்தாலும் முன்னணிக்கு வர முடியாமல் ஒரு முக்கியஸ்தர் என்ற அந்தஸ்தில் மட்டும் இருப்பீர்களா என்பதை உங்கள் ஜாகதத்திலுள்ள சூரியன் மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களை மட்டும் வைத்து தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் ஜாதகத்தில் சூரியன் வலுத்திருந்தால் நீங்கள்தான் நம்பர் ஒன்..நீங்கள் வேலை பார்ப்பவராக இருந்தாலும் அந்த அலுவலகத்தில் நீங்கள் தலைமைப் பதவியை எட்டி விட முடியூம்.அப்படியில்லாமல் சனி வலுத்திருந்தால் நீங்கள் ஒரு துறைக்கு மட்டுமே தலைமைப் பதவியை பெற முடியூம்.
அதாவது நீங்கள் கட்டப்பாவாக வேண்டுமென்றால் சனி ஆதிக்கம் மிகுந்திருக்க வேண்டும்.நீங்கள் பாகுபலியாக வேண்டுமென்றால் சூரியன் ஆதிக்கம் மிகுந்திருக்க வேண்டும்.இங்கே செவ்வாய் கிரகத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.அது போர் புரியூம் சூழ்நிலைக்கு மட்டுமே உதவூம்.அது வேறு டிபார்ட்மன்ட்.
உங்கள் ஜாதகத்தில் எது வலுத்திருந்தாலும் பலமிழந்திருந்தாலும் அதனை பரிகாரத்தின் வாயிலாக மாற்றிக் கொண்டு உங்கள் விருப்பம் போல் கட்டப்பாவாகவோ அல்லது பாகுபலியாகவோ மாற முடியூம்.
ConversionConversion EmoticonEmoticon