இந்த பழமொழியை தெரியாதவர்கள் இருக்க முடியாது.பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பதுதான் அது.புதன் கிடைக்காமல் இல்லை.அது வாராவாரம் காலன்டர் தேதிப்படி வந்து கொண்டுதான் இருக்கிறது.தங்கம் கூட விலை அதிகமானாலும் கிடைத்து விடும்.ஆனால் புதன் பகவானின் அருள் கிடைப்பதுதான் அரிதிலும் அரிது என்பதுதான் இந்த பழமொழியின் சூட்சுமப் பொருள்.
ஏன் புதன் அருள்வதில் அத்தனை விரைவில் அருள் தர மாட்டாரா? மற்ற கிரகங்களுக்கும் இவருக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயம் இருக்கிறது.
எல்லா கிரகங்களும் அதன் தசாபுத்தியில் மிகுந்த அருளைத் தரும்.ஆனால் புதன் கிரகம் மட்டும்தான் தன்னை வழிபடுபவர்களுக்கு அவர்களது தசாபுத்தியில் புதன் வராவிட்டாலும் அருள் தரக் கூடிய கிரகம்.ஆனால் தற்போதைய காலகட்டத்தில் புதன் பெருமானின் அருள் அத்தனை சீக்கிரம் அனைவருக்கும் வழிபடுவதில்லை.இதற்கு காரணம் நமது நகர வாழ்க்கையூம் நமது நாகரீக வாழ்க்கையூம்தான்.
அந்தக் காலத்தில் எல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தொழிலை செய்து கொண்டிருந்தார்கள்.அதில் வணிகம் செய்பவர்கள் பலசரக்கு கடை வைத்திருப்பவர்கள் புதன் பகவானின் கட்டுப்பாட்டிற்குள் வருபவர்களாக இருப்பார்கள்.
இப்போதோ வெளிநாட்டிலிருந்து இயக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆன்லைன் நிறுவனங்களின் வாயிலாக பலரும் பொருட்களை வாங்க ஆரம்பித்து விட்டாரகள்.இப்படி ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது வசதியாக டாம்பீகமாக பெருமையாக இருந்தாலும் இது உண்மையில் உள்ளுரில் கடைபோட்டு சிறிய அளவில் வியாபாரம் செய்யூம் வணிக அன்பர்களுக்கு நீங்கள் செய்யூம் துரோகமே என்றால் அது மிகையாகாது.
ஆன்லைனில் பொருட்களை அதிகம் வாங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு புதபலம் குறையூம்.அதன் காரணமாக இப்போது அதிக பணம் புழக்கத்தில் இருப்பது போல தெரிந்தாலும் நாளடைவில் உங்களிடம் பணப்புழக்கம் இல்லாது போய் கடன்பட ஆரம்பிக்க நேரிடும்.
அதனால் புதன் பகவானின் அருட்கடாட்சம் கிடைப்பதற்கும் கையிலுள்ள பணப்புழக்கம் கரைந்து போகாமல் அதிகரிக்கவூம் உங்கள் ஊரிலுள்ள சின்னச் சின்ன கடைகளில் ஏதாவது ஒரு பொருளை மாதந்தோறும் வாங்குவது என்று வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
தெருமுனை அண்ணாச்சி கடைகளில் பச்சைப்பயிறு அல்லது கல் உப்பை வாங்கி வைப்பது நலம் பயக்கும்.
ConversionConversion EmoticonEmoticon