எப்படி ஒரு குடும்பத்தில் தாய் - தந்தையர் அந்த குடும்பத்திலுள்ள பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக காக்கிறார்களோ அதே போல்தான் இயற்கையூம் கடவூளும் கிரகங்களும் அனைவரையூம் காக்கின்றன.அப்புறம் ஏன் சிலருக்கு கஷ்டம் சிலருக்கு நஷ்டம் சிலருக்கு சொகுசான நல்ல வாழ்க்கை என்று கேள்வி எழலாம்.இதற்கு காரணம் என்று பூர்வஜென்ம கர்மாவை அனைவரும் சொல்வது வழக்கம்.இந்த கர்மா என்பதைப் பற்றி தனித் தொடர் பதிவே எழுத வேண்டும்.ஏனென்றால் கர்மா என்ற சிக்கலில் சிக்கிக் கொள்ளாமல் வாழ்க்கையை கர்மாவின் பிடியிலிருந்து ஜோதிடரீதியாக மீட்டு எப்படி சுகவாழ்வூ வாழ்வது என்ற சூட்சுமத்தை பல ஆண்டுகளாக செய்த ஆய்வின் பயனாக கண்டறிந்திருக்கிறேன்.அதனை பின்னர் ஒரு நாளில் எழுதுகிறேன்.
இப்போது எழுத வந்தது தாய்-தந்தையர் போல இருக்கும் கிரகங்களைப் பற்றி.கிரகங்களில் சூரியனை தந்தைக்கும் சந்திரனை தாய்க்கும் உருவகப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.மனதிற்கும் சிந்தனைக்கும் காரகனாக இருப்பதும் இதே சந்திரன்தான்.
அதனால் ஒரு பிரச்சனை என்று கவலைப் படாமல் அதனை தீர்த்து வைப்பதற்கு எப்படி சின்னப் பிள்ளைகள் தாயிடம் கேட்டால் அதனை தக்க தருணத்தில் தந்தையிடம் அந்த தாய் சொல்லி பிள்ளைக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பாளோ அதே போன்ற நிலையில்தான் சந்திரன் அனைவருக்கும் உதவ காத்துக் கொண்டிருக்கிறான்.
அதனால்தான் கோவிலுக்கு முதலில் சென்றதும் விநாயகரை வணங்கி விட்டு தாயார் சந்நிதிக்கு சென்றபின்னர்தான் சுவாமி சந்நிதிக்கு செல்வது வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
மனம்தான் எல்லா பிரச்சனைக்கும் எல்லா கவலைகளுக்கும் காரணம்.அந்த மனம்தான் எல்லா சிக்கலான பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வை சிந்தித்து தருகிறது என்பதால் மனோகாரகனான சந்திரனையூம் நீங்கள் இனி உதவிக்கு அழைத்துக் கொள்ளலாம்.
அதாவது கோவில்களுக்கு செல்லும்போது முதலில் விநாயகர் அதன்பின் தாயார் சந்நிதிக்கு செல்வதோடு அங்கிருந்து சுவாமி சந்நிதியின் வழிபட்டபின்னர் உடனடியாக நவகிரக சந்தியிலுள்ள உள்ள சந்திரனை மனமுருக வழிபட்டபின்னர்தான் மற்ற தெய்வங்களை அங்கே வழிபட ஆரம்பிக்க வேண்டும்.
அத்துடன் இப்போது வாழ்கிற வாழ்க்கை எப்படியிருந்தாலும் இனிவரும் நாட்கள் வளமாக அமையவூம் மகிழ்வான வாழ்க்கை வாழவூம் உங்களது ஜாதகப்படி சந்திரனுக்கு(இந்த பரிகாரம் ஒவ்வொருக்கொருவர் வேறுபடும்) பரிகாரம் செய்து கொண்டால் நல்லது தானே நடக்க ஆரம்பிக்கும்.
ConversionConversion EmoticonEmoticon