ஜாதகத்தில் ஏதாவது ஒரு கிரகம் வக்கிரமாக அமைந்திருந்தால் அந்த கிரகத்திடமிருந்து நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது.ஆனால் சற்றே மாற்றி யோசித்தால் அந்த வக்கிர கிரகத்திடமிருந்து சூப்பரான பலனை அடையலாம்.அதற்கு ஒரு சுவாரஸ்யப் பரிகாரம் இருக்கிறது.இந்த பரிகாரத்தை யாரும் செய்யலாம்.ஆனால் அதற்கென்று ஒரு வரையறை இருக்கிறது.பின்வரும் முறையில் அந்த சுவாரஸ்யப் பரிகாரத்தை செய்யலாம்.
உதாரணமாக குரு கிரகம் உங்களது ஜாதகத்தில் வக்கிரகமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.அப்போது நீங்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அதாவது டிராஃபிக் அதிகமாக உள்ள சாலையில் (சாலையின் நடுவே பேரிகேடு போட்டிருக்கும் சாலையாக இருந்தால் நல்லது) ஒரு சைக்கிளில் செல்லுங்கள்.டூவீலரிலும் செல்லலாம்.அது உங்கள் விருப்பம்.சைக்கிளாக இருந்தால் மெதுவாக பாதுகாப்பாகச் செல்லாம் என்பதால் சைக்கிள் நல்லது.
இப்போது உதாரணமாக உங்களது ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் குரு வக்கிரமாக இருப்பதாக வைத்துக் கொள்வோம்.அப்படியானால் எட்டாம் வீட்டிலிருந்து குரு பின்னோக்கி திரும்புவாக நினைத்துக் கொண்டால் அந்த திரும்பிய இடம் ஏழாம் வீடாக இருக்கும்.இதுவே நான்காம் வீட்டில் குரு வக்கிரமாக இருந்தால் மூன்றாம் வீடு என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.
சரி எட்டாம் வீட்டு வக்கிர குருவிற்கான பரிகாரத்திற்கு வருவோம்.
முதலில் எங்காவது அருகம்புல் கிடைக்கிறதா என்று பாருங்கள்.அதனை வாங்கிக் கொண்டு அருகில் உள்ள ஏதாவது ஒரு சிறிய பிள்ளையார் கோவிலில் உள்ள பிள்ளையாருக்கு அந்த அருகம்புல்லை வைத்து விட்டு வாருங்கள்.சைக்கிளில் ஏறுங்கள்.
சைக்கிளில் ஏறிய இடத்திலிருந்து சிறிது தொலைவூ சென்று விட்டு சாலையில் பேரிகேடு வழியாக ஒரு யூடர்ன் போட்டு திரும்ப வாருங்கள்.
உதாரணமாக எட்டாம் இடத்தில் வக்கிர குரு இருந்தால் ஏழு முறை இது போல யூடர்ன் அடிக்க வேண்டும்.நாலாம் இடத்தில் வக்கிர குரு இருந்தால் மூன்று முறை யூடர்ன் அடிக்க வேண்டும்.
இதனை எந்த நாளில் செய்ய வேண்டும்.
வக்கிர கிரகத்துக்குரிய கிழமையில் இதனை செய்ய வேண்டும்.வக்கிர குருவூக்கான பரிகாரம் என்றால் அதனை வியாழக்கிழமையில் செய்ய வேண்டும்.வேறு வக்கிர கிரகம் என்றால் அதற்குரிய கிழமையில் இதனை செய்ய வேண்டும்.
இந்த பரிகாரத்தை செய்து முடித்தபின்னர் வரும் வழியில் ஏதாவது ஒரு ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு ஒரு சிறிய வெண்ணைய்ப் பாக்கெட் வாங்கிக் கொடுத்து சார்த்தும்படி செய்து விட்டு ஒரு கும்பிடு போட்டு விட்டு வந்தால் போதும்.
ConversionConversion EmoticonEmoticon