ஒரு சிலரது ஜாதகத்தில் ஒன்றௌ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களோ வக்கிரமாக அமைந்திருக்கக் கூடும்.அப்படி அமைந்தவர்களுக்கு அந்த வக்கிர கிரகம் எந்த கிரகத்தின் வீட்டில் அமைந்திரு;ககிறதோ அந்த வீட்டின் காரகத்தைக் கெடுத்து விடும் என்பதுதான் பொதுவாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.ஒரு சிலர் இது போல வக்கிர கிரகங்கள் அந்த காரகத்துவத்தைக் கெடுத்தாலும் சற்று காலதாமதமாக அந்த கிரகத்தின் நற்பயன்களைத் தந்து விடும் என்று சொல்வதுண்டு.ஆனால் ஒரு ஜோதிட ஆய்வாளனாக ஒரு புரொபஷனல் ஜோதிடனாக ஏராளமான ஜாதகத்தைப் பார்த்த வகையில் ஒருவருடைய ஜாதகத்தில் வக்கிர கிரகம் இருக்குமானால் அந்த வக்கிர கிரகம் தான் அமர்ந்த கிரகத்தின் காரகத்தை கெடுக்கவே செய்யூம்.அந்த கெடுதலின் அளவூ என்பது அந்த ஜாதகருடைய லக்னாதிபதி எந்த அளவிற்கு வலிமையாக இருக்கிறதோ அதைப் பொறுத்து அவரால் தாக்குப்பிடிக்கும் விதத்தில் இருக்கும்.
இப்போது இந்த பதிவில் சொல்ல வருவது வேறு.
கோள்சார ரீதியில் கிரகங்கள் வக்கிரம் பெறும்போது இது போன்ற வக்கிர கிரகத்தை சுயஜாதகத்தில் அமையப்பெற்றவர்கள் பெருத்த அடியை பெற்றுத்தான் ஆக வேண்டும் என்ற நிலைமை வந்து விடுகிறது.அதுவூம் பெரிய கிரகங்களான சனி குரு போன்றவை கோள்சார ரீதியில் வக்கிரம் பெறும்போது வக்கிர கிரக ஜாதகர்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.இல்லையென்றால் இருப்பதையூம் அந்த கோள்சார வக்கிர கிரகங்கள் பிடுங்கிக் கொண்டு சென்று விடும்.இதற்கு பரிகாரம் கிடையாதா என்றால் பரிகாரம் இருக்கிறது.பிரச்சனை என்ற ஒன்று இருந்தால் பரிகாரம் என்ற ஒன்று இருக்கவே செய்யூம்.ஆனால் வக்கிர கிரகங்களுக்கான பரிகாரங்களை மிக மிக நுட்பமாகத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டும்.அது ஒரு சவாலாக காரியமும் கூட.ஆனால் இறையருளால் பிரபஞ்ச ஆற்றலால் அதனை வெற்றிகரமாக தந்து வருகிறேன் பல ஆண்டுகளாக.
ConversionConversion EmoticonEmoticon