இது ஒரு பொதுத்துறை வங்கியில் அண்மையில் நடந்தது.அந்த வங்கியினுள் செல்வதற்கே விரும்ப மாட்டேன்.காரணம் அங்குள்ள அதிகாரிகள் அலுவலர்கள் கடைநிலைப் பணியாளர்கள் உட்பட அனைவரும் சர்வாதிகாரரிகள் போல சர்வ திமிருடன் வாடிக்கையாளர்களை கசக்கிப் பிழிவார்கள்.வாடிக்கையாளர்களை எப்போதும் இழிவாக நடத்தும் வங்கி என்பதால் அங்கே போவதில்லை.ஆன்லைன் வழியாக வங்கி சேவைகளைப் பயன்படுத்துவதோடு சரி.ஒரு நண்பருக்கு துணையாக அங்கே செல்ல வேண்டி வந்து விட்டது.அப்போது நடந்தது இந்த சம்பவம்.
வங்கியில் ஒரு நகைக்கடன் வாடிக்கையாளரிடம் வங்கி அதிகாரியாக இருக்கும் ஒரு தடித்த கருத்த பெண்மணி தடித்த வார்த்தைகளால் சொன்னது இது.
'தபாருங்க.சும்மா வட்டியை அட்ஜஸ்ட் பண்ணி நகையை திரும்ப அடமானம் வைக்கிற வேலையெல்லாம் வைச்சுக்காதிங்க.முழு லோன்தொகையையூம் எங்கேயாவது பணத்தை வாங்கிட்டு வந்து நகையை திருப்பிட்டு உடனே நீங்க கூடுதல் தொகைக்கு அடமானம் வைச்சுக்கலாம்.கொரோனாவாவது லாக்டவூனாவது.பணத்தை கட்டிட்டுப் போங்கன்னா போங்களேன்"
இவைதான் அந்த பெண்மணி கூறியது.
ஜோதிடநுட்பத்துடன் அந்த சம்பவத்தை கவனித்துப் பார்த்த போது "கிரகலட்சனத்தின்படி" அந்த பெண்மணி வக்கிரகுருவூம் வாக்கு ஸ்தானத்தில் கெட்ட சனியூம் அப்புறம் கேது புத்தியூடன் உள்ளவராக இருப்பார்.இவர் இப்படித்தான் பேசுவார்.அந்த வாடிக்கையாளர் தன்னுடைய வாக்குஸ்தானத்தை அமைதிப்படுத்திக் கொண்டு இருப்பது நலம் என்று அவருக்கு புத்திமதி சொன்னேன்.
அவர் அதன்படியே செய்து மற்றொரு அலுவலரின் கருணையால் பணம் செலுத்தாமல் நகையை மறுஅடகு வைத்து திரும்பினார்.
திரும்பி வரும் வழியில் அந்த வாடிக்கையாளரிடம் சொன்னேன்.
அந்த பெண்மணியைப் பார்த்தீர்களா அவர் ராணுவத்தில் தளபதி போல ஆணவத்தில் ஆடுகிறார்.இவர் வாழ்க்கை இனி அழியூம்.இவரது சம்பாத்தியம் சேமிப்பு எல்லாம் கடன் என்னும் ஆறாம் இடத்தை வைத்து இவர் அழிச்சாட்டியம் செய்ததால் ஆறாம் இடத்தின் அடுத்த காரகமான நோய் இவரையூம் இவர் குடும்பத்தாரையூம் முற்றாக அழித்து ஒழித்து விடும்.ஆறாம் இடத்தில் காரகம் குறித்த இந்த சச்சரவில் நீங்கள் அமைதி காத்ததால் ஆறாம் இடத்தின் இன்னொரு காரகமான எதிர்ப்பு என்பது இனி உங்கள் வாழ்வில் இராது.மெல்ல மெல்ல முன்னுக்கு வந்து எல்லா நகையையூம் திருப்பி விடுவீர்கள் என்று சொன்னேன்.
அவர் என்னை கையொடுத்துக் கும்பிட்டார்.
என்னைக் கும்பிடாதீர்கள்.நானொரு அற்ப மானுடன்.நானொரு கருவி அவ்வளவே.நீங்கள் வணங்க வேண்டியது கிரகங்களைத்தான்.போய் வாருங்கள்.நலமாக இருப்பீர்கள் என்று அனுப்பி வைத்தேன்.
ConversionConversion EmoticonEmoticon