மனம் சந்திரன்.
புதன் புத்தி.
இந்த இரண்டும் ஒருங்கிணைந்தால்தான் புதிய சிந்தனையூம் புதிய யூக்திகளும் தோன்றும்.அதை செயல்வடிவில் கொண்டு வர செவ்வாய் தேவை.
அதனை ஒரு பொருளாக தயாரிக்க வேலைசெய்ய ஆட்கள் பலம் பெற சனியூம் தேவை.தயாரித்த பொருட்களுக்கு அமோக ஆதரவூ தர பெண்கள் அதாவது சுக்கிரன் தேவை.
இதையெல்லாம் செய்து கொடுக்க தேவையான மூலதனத்தைப் பெற வங்கிக்கடன் பெற குருவூம் தேவை.அந்த வங்கிக்கடனை "சுலப" முறையில் "கொடுக்க வேண்டியதை" கொடுத்து சீக்கிரமாகப் பெற ராகுவூம் தேவை.
ஒரு பிசினஸை நடத்துவதற்கே இத்தனை பேர் தேவை என்று மலைப்பாக இருக்கறதல்லவா? இவை எல்லாம் கண்ணாமூச்சி காட்டினாலும் "நான்" என்ற கெத்து காட்டும் லக்கினம் மட்டும் வலுவாக இருந்து விட்டால் யாரை நம்பியூம் இருக்க வேண்டாம்.ஜெயிக்கிற பாதையில் போய்க்கொண்டே இருக்கலாம்.
ConversionConversion EmoticonEmoticon