சில நேரங்களில் மனம் கசிந்துருகும்படியான சம்பவங்கள் நடந்து விடுவதுண்டு.காலத்தின் கணக்கு எப்போதுமே யாருக்கும் புரிந்து விடுவதில்லை என்று கூறினாலும் ஒரு நேர்மையான ஜோதிட வல்லுநரால் காலத்தைப் புரிந்து கொள்ளவூம் சரியானபடி அதனை எதிர்கொள்ளவூம் முடியூம் என்பதை பல சம்பவங்கள் நிரூபித்திருக்கின்றன.அவற்றில் ஒன்றுதான் பின்வரும் சமீபத்தில் நடந்த சம்பவம்.
அந்த மனிதர் ஒரு பெரிய வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்.பாரம்பரியமாக அவரது குடும்பத்தில் அனைவருமே நல்ல கடவூள் பக்தியூடையவர்கள்.குடும்பத்தில் அனைவருமே நல்ல உத்யோகம் பார்த்து ஓய்வூ பெற்றவர்கள்.அவர் ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் உயரதிகாரியாகப் பணியாற்றி ஓய்வூ பெற்றவர்.ஒரே பெண்.பையன்கள் இல்லை.பெண்ணை பையனைப் போல செல்லமாக வளர்த்திருக்கிறார்.உரிய வயதில் திருமணத்திற்கு வரன் பார்க்க ஆரம்பித்தபோதுதான் அந்த பெண் தனக்கு திருமணத்தில் நாட்டம் இல்லை என்றிருக்கிறாள்.ஏதாவது காதல் சமாச்சாரமாக இருக்கப்போகிறதோ என்று கவலையூடன் அந்த பெண்ணை தானே விசாரித்ததில் அது போல எதுவூம் இல்லையென்றும் திருமணம் என்றாலே பிடிக்கவில்லை என்றும் அந்தப் பெண் கூறியிருக்கிறார்.அவர் தன் பெண்ணின் ஜாதகத்தைக் கொண்டு வந்து பார்த்தபோதுதான் விஷயம் புரிந்தது.
அந்த பெண்ணிடம் எவ்வித தவறும் இல்லை.எவ்வித காதல் தொடர்புகளும் அந்த பெண்ணிற்கு இல்லை.அந்த பெண்ணும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல உத்யோகத்தில்தான் பணிபுரிந்து கொண்டிருக்கிறாள்.
ஜாதகத்தை எடுத்துப் பார்த்தபோதுதான் அந்த பெண்ணிற்கு திருமணத்தடை சனிகிரகத்தாலும் சுக்கிரனாலும் ஏற்பட்டிருந்தது.இன்னொரு பக்கம் நிழல் கிரகங்களான ராகுகேதுக்களும் இடைஞ்சல் செய்து கொண்டிருந்தன.அந்த பெண்ணின் ஜாதகத்தை அப்படியே மூடி வைத்து விட்டு அந்த பெரிய மனிதரின் ஜாதகத்தை காட்டும்படி கேட்டேன்.தன் ஜாதகம் எதற்கு என்று தடுமாறினார்.
அப்புறம் அவரிடம் விளக்கினேன்.அவரது ஜாதகத்தில் கர்மா சரியில்லாமல் இருக்கிறது.அதன் தாக்கம் அவரது வாரிசின் வழியாக அவர் அனுபவிக்க வேண்டுமென்று இருக்கிறது.அவரது பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்து அந்த பெண்ணிற்கு ஒரு துல்லியமான பரிகாரத்தைக் கொடுத்து அனுப்பினால் அந்த பெண்ணிற்கு வெகு விமரிசையாக திருமணம் ஆகி விடும்.ஆனால் திருமணத்திற்கு பின்னர் அந்த பெரிய மனிதரின் ஜாதகத்தில் உள்ள கர்மா அந்த பெண்ணின் திருமண வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தி விவாகரத்தில் கொண்டு போய் விட்டு அந்த மனிதரை பலமுறை கோர்ட் படியேற வைத்து அவமானப்படுத்தி மனக்கஷ்டத்தில் கொண்டு போய் துன்புறுத்தி மகிழ்ந்து விடும்.அதனால் அவருக்குத்தான் முதல் பரிகாரம் அதுவூம் உயர்நிலை சூட்சுமப்ரிகாரம் வேண்டும்.அதனைச் செய்தால்தான் அவரும் துன்பமில்லாமல் மகிழ்வோடு ஓய்வூ காலத்தைக் கழிப்பார்.அந்த பெண்ணும் சந்தோஷமாக திருமணவாழ்வைத் துவங்கி தன் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்வார் என்பதை எடுத்துச் சொல்லியதும் புரிந்து கொண்டார்.அவரது கர்மாவின் வீச்சு அதிகம் என்பதால் அதற்கேற்ப மிகுந்த பொருட்செலவூடன்தான் அவர்களுக்கான பரிகாரத்தை செய்ய முடிந்தது.நாற்பத்தெட்டு நாட்கள் அவருக்கான நான் செய்த பரிகாரத்தின் விளைவாக அந்த பெண்ணிற்கு நல்ல இடத்தில் திருமணமாகியது.திருமணமான அடுத்த சில மாதங்களிலேயே அந்த பெண்ணிற்கு இரண்டு விதமான பதவி உயர்வூகள் வந்தன.ஒன்று உத்யோகத்தில் தேசிய அளவிலான மேலதிகாரி என்று.இன்னொன்று குடும்ப அளவில் 'தாய்" என்ற பதவி உயர்வூ.அஃப்கோர்ஸ் அந்த பெரிய மனிதருக்கும் தாத்தா என்ற பதவி உயர்வூ வர சந்தோஷமாக அவர்கள் குடும்பத்துடன் வந்து கூடுதலாக தட்சிணையூம் இனிப்பும் பழங்களும் கொடுத்து ஆசி பெற்று சென்றனர்.அவர்கள் சூட்சுமப்பரிகாரத்திற்காக கொடுத்திருந்த பணம் முழுக்க அவர்களுக்கான பரிகார பூஜைக்கே செலவாகி விட்டது.அவர்களது மகிழ்ச்சிதான் எனது சொத்து.அதுதான் எனது சம்பாத்தியம்.
ConversionConversion EmoticonEmoticon