இதுவூம் ஒரு வெற்றிக்கதைதான்.
அந்த தம்பதியர் ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.பணம் என்றால் பணம் வீடு முழுக்க பணம் என்றே சொல்லலாம் என்பது போன்ற பல்வேறு தொழில்கள் வியாபாரம் என்று பிசியான பணக்கார குடும்பம்.ஆனால் திருமணமாகி இருபத்தியிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.ஆனால் அம்மா என்று அழைக்க ஒரு வாரிசு இல்லையே என்று அந்த பெண்மணி கலங்கித் தவிக்காத நாளில்லை.அவர்கள் என்னைப் பற்றி கேள்விப்பட்டு ஒரு நாள் வந்திருந்தார்கள்.தங்களது கதை முழுக்க கண்ணீர் மல்க கூறினார்கள்.அந்த பெண்மணி நல்ல மதிப்பான தோற்றத்துடன் இருந்தார்.அவரது கணவரும் எளிமையான பணக்காரத்தோற்றத்துடன் இருந்தார்.ஆனால் இருவர் முகத்திலும் விவரிக்க இயலாத சோகம்.
அவர்கள் சொல்ல ஆரம்பிக்கும் முன்பாக என் மேசை அவர்கள் எடுத்து வைத்த அவர்களது ஜாதகங்களைப் பார்த்ததுமே புரிந்து போனது.அவர்களது ராசிக்கட்டத்தில் இருந்த கிரகங்கள் கேலியாக சிரிப்பதைப் போலிருந்தது.சற்றே நேரம் மௌனமாக அந்த கட்டங்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.நான் எதுவூம் பேசவில்லை.அப்படி பார்த்துக் கொண்டிருக்கும்போதே என் மனதில் ஒரு சூட்சுமப்பரிகாரம் தோன்றி விடும்.அதனை பின்னர் அவர்கள் சூட்சுமப்பரிகாரம் செய்யலாம் என்று அனுமதி கொடுத்தபிறகு அவர்களது ஜாதகங்களை பூஜையில் வைத்து அந்த சூட்சுமப்பரிகாரத்தை உருவேற்றி அவர்களுக்கான பூஜையை செய்து முடித்து அவர்கள் செய்து முடிக்க வேண்டிய பரிகார முறைகளை சொல்லிக் கொடுத்து அவர்களை அனுப்பி விடுவேன்.இதுதான் வழக்கமாக நான் செய்வது.
அந்த பெண்ணின் ஜாதகத்தில் ஒரு வித்தியாசமான அமைப்பாக செவ்வாய்-சுக்கிரன் இணைவூ காணப்பட்டது.அப்படி இருந்தும் அந்த பெண்ணிற்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.அவர்கள் இரண்டு பேரின் ஜாதகத்தையூம் அப்படியே வைத்து விட்டு சில கேள்விகளை அவர்களிடம் கேட்க ஆரம்பித்தேன்.இது அவர்களது குடும்ப விவகாரம் என்பதால் அந்த கேள்விகளை இங்கே பொதுவெளியில் பதிவிட இயலாது.
அதன்பின்னர் அவர்களுக்கான சூட்சுமப்பரிகாரம் என் மனதில் முழு வடிவம் பெற்றது.அவர்களுக்கு செய்ய வேண்டிய பரிகார முறைகளை விளக்கிச் சொல்லி விட்டு நான் அவர்களுக்காக செய்ய வேண்டிய ஜாதக பூஜை முறைகளையூம் தெரிவித்து அவர்களது சம்மதத்தை பெற்றுக் கொண்டேன்.அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தையூம் (உயர்நிலை சூட்சுமப்பரிகாரத்திற்கான கட்டணம்) தெரிவித்து கட்டணத்தை செலுத்தச் சொல்லி விட்டு அவர்களுக்கான பரிகார வேலைகளை செய்ய ஆரம்பித்து விட்டேன்.
இது சில மாதங்கள் வரை நடந்தது.அவர்களும் தங்கள் பங்கிற்கு செய்ய வேண்டிய பரிகார வழிபாட்டை (குறிப்பிட்ட சில கோவிலில் அவர்கள் செய்யூமாறு இருக்கும்) செய்து முடித்தார்கள்.
அதன்பின்னர் என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்திருந்திருப்பீர்கள்.அவர்கள் சந்தோஷச்செய்தியை சில மாதங்களிலேயே தெரிவித்தார்கள்.அந்த பெண் கருவூற்றிருப்பதை தெரிவித்ததும் அந்த கரு தங்குவதற்கான இன்னொரு பரிகார வழிபாட்டையூம் அவர்களுக்கு தெரிவித்து வாழ்த்தினேன்.
அதன்பின்னர் அந்த பெண்மணி ஒரு அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார்.அதன்பின்னர் அவர்கள் மூன்று பேராக அதாவது குழந்தையூடன் வந்து நன்றி தெரிவித்து வணங்கிச் சென்றார்கள்.அப்போது அந்த பெண்மணி முதன்முதலாக நடுக்கத்துடனும் பதட்டத்துடனும் கலக்கத்துடனும் வந்துசென்றது மனதில் நிழலாடியது.ஆனால் இப்போது அந்த பெண்மணியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி.ஆனந்தம்.அந்த சந்தோஷம் அப்படியே நிலைக்க வேண்டுமென்று மனதார வாழ்த்தினேன்.அவர்கள் இப்போதும் எப்போதாவது தொடர்பு கொள்வார்கள்.மொத்தத்தில் அவர்கள் நலமாக வாழ்ந்து வருகிறார்கள்.இதனை நடத்திக் கொடுத்த அந்த பிரபஞ்ச சக்திக்கும் தெய்வத்திற்கும் சூட்சும சக்திக்கும் நன்றி.
ConversionConversion EmoticonEmoticon