இது ஒரு அனுபவப் பதிவூ.
ஒரு ஜோதிட வாடிக்கையாளர்.நன்றாக கிடுகிடுவென்று வளர்ந்து கொண்டிருந்த அவரது பிசினஸ் திடீரென்று நொடித்துப் போனது.கடன்கள் மளமளவென்று உயர்ந்து விட்டன.ஒரு தொழில் நொடித்துப் போக வேண்டுமென்றால் ஒரே நாளில் நொடித்துப் போகாது.சிறுகச் சிறுக மெல்ல மெல்லத்தான் வாடிக்கையாளர்கள் வரவூ குறைந்து போட்டிகள் அதிகரித்து கணக்கு வழக்குகளில் கண்ணை மறைத்து நஷ்டங்களாக வளர்ந்து அதன்பின்னர்தான் எப்படிப்பட்ட பிசினஸூம் நலிந்து போகும்.கடன்கள் என்பதும் அப்படித்தான்.ஒரே நாளில் பெரிதாக வந்து விடாது.சிறுகச் சிறுகத்தான் வளரும்.
இந்த அன்பருக்கு எல்லாம் ஒரே மாதத்திற்குள் நடந்து முடிந்து விட்டது.காரணம் புரியாமல் தவித்தார்.என்ன ஏது என்று பல இடங்களில் போய் பலவிதமான ஜோதிடர்களை எல்லாம் பார்த்து கடைசியில்தான் என்னிடம் வந்திருந்தார்.
அவர் வாட்ஸ்அப்பில் அனுப்பிய அவரது ஜாதகத்தை ஆய்வூ செய்து பார்த்ததில் அவரது சகோதரஸ்தானமும் அவரது சகோதரரின் மனைவியின் குணமும் புரிந்தது.அவரது சொந்த சகோதரரின் மனைவியே பொறாமை காரணமாக இவருக்கு செய்வினை வைத்திருக்கிறார்.அவரது சகோதரரின் மனைவியின் குடும்பம் மிகவூம் ஏழ்மையான குடும்பம்.அதனால் அந்த பெண்மணிக்கு ஆரம்பத்திலிருந்தே தாழ்வூ மனப்பான்மையூம் பொறாமையூம் இவரது மனைவி மீது இருந்திருக்கிறது.இவர்களை கவிழ்ப்பதற்கு தக்க தருணம் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார்.அந்த துரோகப் பெண்மணியிடம் ஜோதிடம் சொன்னவர் கோள்சார ரீதியில் இவருக்கு கிரகங்கள் பகையாக இருக்கும் காலகட்டத்தில் செய்வினை ஏவல் போன்றவைகளை செய்தால் குலதெய்வத்தால் கூட அவரை காப்பாற்ற முடியாது என்று சொல்லி தக்க தருணத்திற்காக காத்திருந்து செய்வினை வைத்து விட்டார்கள்.
ஆனால் அந்த துரோகப் பெண்மணி இவரது சகோதரரிடம் என்ன சொல்லியிருக்கிறாள் என்றால் உங்களுக்கு உங்க சகோதரர் செய்வினை வைத்து விட்டதாக கோள் மூட்டி சகோதரர்களைப் பிரித்தும் விட்டிருக்கிறார்.
இவரது சகோதரர் இவர்தான் அவருக்கு செய்வினை வைத்து விட்டதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்.ஆனால் செய்வினை வைக்கப்பட்டிருப்பது இவருக்குத்தான்.
இது ஜாதகத்தைப் பார்த்தபோதும் கிரகபிரசன்ன முறையில் பார்த்தபோதும் நன்றாகப் புரிந்தது.அதனால் இவருக்கு ஒரு பரிகாரத்தை உரிய முறையில் செய்ய ஆரம்பித்தேன்.இது போன்ற செய்வினைக்கான பரிகாரங்களைச் செய்யூம் போது பல தடைகள் வரும்.பலவிதமான எச்சரிக்கைகள் சூட்சுமமாக தெரியவரும்.அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் கிரகங்களையூம் தெய்வத்தையூம் பிரபஞ்சத்தையம் முழுமையாக நம்பி இதில் செய்து வர வேண்டும்.
இப்படி செய்ய ஆரம்பிக்கும்போது ஒரு வளர்பிறை அஷ்டமி தினத்தன்று ஒரு நன்றாக வளர்ந்திருந்த நாட்டு நாய் எனது வீட்டிற்குள் காம்பவூன்ட் சுவரேறிக் குதித்து உள்ள வர ஆரம்பித்தது.உள்ளே வந்து போர்டிகோவில் இருந்த காரின் அடியில் படுத்துக் கொள்ள ஆரம்பித்தது.எந்த சப்தமும் கொடுப்பதில்லை.அது குரைப்பதும் இல்லை.செய்வினை தொடர்பான விஷயங்களில் நாய்கள் வந்தால் அது குரைக்கவே குரைக்காது.அமைதியாக பார்க்கும்.அந்த பார்வையில் பலவிதமான செய்திகள் மறைந்திருக்கும்.அதனைப் புரிந்து கொள்ள திறமை வேண்டும்.அந்த நாய் என்னிடம் எந்த உணவையூம் கேட்பதில்லை.அது பாட்டுக்கு சுவரேறிக் குதித்து வந்து காரின் அடியில் படுத்துக் கொள்ளும்.கார் போன்ற வண்டி வாகனங்கள் எல்லாம் நான்காம் இடத்தைக் குறிக்கும்.அதாவது அது சகோதர ஸ்தானத்தையூம் குறிக்கும்.இந்த நிலை தொடர்ந்து கொண்டே இருந்தது.
அந்த நாயை விரட்டும்படி அனைவரும் சொன்னார்கள்.நான் விரட்டவில்லை.உணவூ கொடுத்தாலும் அது உண்ணாது என்பது புரிந்தது.
வளர்பிறை அஷ்டமியில் உள்ளே வந்த அந்த நாய் இன்று தேய்பிறை அஷ்டமியன்று வெளியே சென்று விட்டது.
வளர்பிறை அஷ்டமி என்பது வளத்தை உள்ளே கொண்டு வருவதற்கான விசேஷ தினம்.தேய்பிறை அஷ்டமி என்பது வறுமையை வெளியே விரட்டிச் செல்வதற்கான தினம்.
எனக்குப் புரிந்து விட்டது.
பரிகாரம் பலித்து விட்டது.அந்த ஜோதிட வாடிக்கையாளருக்கு அவரது சொந்த சகோதரரின் மனைவி வைத்திருந்த செய்வினையை எடுத்து விட்டேன்.அதனை எடுத்தது உண்மையில் ஸ்ரீபைரவர்தான்.அவரின் சக்திக்கு ஈடு இணையில்லை.இனி அந்த அன்பருக்கு வாழ்க்கையில் முன்னேற்றமே நிகழும்.அவரது தொழிலும் வேகமாக வளர்ச்சி பெற்று அவர் முன்னுக்கு வந்து விடுவார் என்பதை அவரிடம் சொல்லி ஒரு நல்ல நாள் பார்த்து அவரது வியாபார நிறுவனப் பெயரின் முன்னால் ஸ்ரீ என்று சேர்த்து வைத்துக் கொண்டு (இதைப் பார்க்கும் நீங்கள் உடனே ஸ்ரீ சேர்த்துக் கொள்ளாதீர்கள்.இது ஒரு சிலருக்குத்தான் ஒத்துப் போகும்.மற்றவர்களுக்கு வேறு பெயர் சேர்க்கை தேவைப்படும்.மாற்றி செய்து விட்டால் திருப்பி அடித்து விடும்) வியாபார நிறுவனத்தை புதிதாக திறப்புவிழா வைத்து துவங்கச் சொன்னேன்.
அப்படியானால் சொந்த கணவனின் சகோதரருக்கே செய்வினை வைத்த அந்த பெண்ணும் அவரது குடும்பமும்?
இனி மெல்ல மெல்ல அந்த குடும்பம் பாழாகும்.வேறு வழியில்லை.இது போன்ற தவறு செய்தவர்களுக்கு இறைவன் தரும் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும்.மரணமே மேல் என்று கெஞ்சும் அளவிற்கு அவன் தரும் தண்டனை கடுமையாக இருக்கும்.அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஆனால் அவர்களுக்கு பாபவிமோசனம் தர ஒரு வழியிருக்கிறது.அதைச் சொல்ல மனமில்லை எனக்கு.
ConversionConversion EmoticonEmoticon