இது மூடநம்பிக்கைப் பதிவூ அல்ல.தெய்வங்களும் மனிதர்களைப் போலவே என்றுதான் நாம் கருதுகிறௌம்.அதனால்தான் தெய்வங்களை குழந்தையாகவூம் தோழனாகவூம் எஜமானானகவூம் வழிகாட்டியாகவூம் தாயாகவூம் தந்தையாகவூம் நினைத்து தொழுகிறௌம்.இப்போது லாக்டவூனில் நமது பாதுகாப்பிற்காக கோவில்களைப் பூட்டி வைத்து விட்டு திடீரென ஒருநாளில் கோவிலைத் திறந்து பக்தர்களை அனுமதிக்கும்போது அந்த தெய்வம் எப்படி இருக்கும்.நாம் மனிதர்களைப் போலவே உருவகப்படுத்திக் கொண்டிருக்கும் தெய்வத்திற்கும் கோவம் ஆற்றாமை பசி தவிப்பு(பக்தனைக் காணாததவிப்பு) என்று எல்லா மானுட குணங்களும் இருக்குமல்லவா.
அதனால் கோவிலுக்குச் செல்ல விரும்பும் அன்பர்கள் அது எந்தக் கோவில் அந்த கோவிலில் உள்ள தெய்வத்திற்கு பிடித்தமான அபிசேஷகப்பொருள் பிடித்தமான நைவேத்தியப் பண்டம்(உணவூப்பொருள்) எது என்று தெரிந்து கொண்டு போய் கொடுத்து விட்டு வழிபடுங்கள்.கொண்டுபோய் கொடுத்ததை அவர்கள் தெய்வத்திடம் சேர்ப்பிக்கிறார்களா இல்லையா என்பது நம் பிரச்சனை அல்ல.அதனை தெய்வமே பார்த்துக் கொள்ளும்.இவ்விதம் சென்று வழிபடும்போது இதுநாள் வரைக்கும் அந்த தெய்வம் செய்த உதவிகளுக்கு நன்றி மட்டுமே சொல்லி நலம் விசாரித்து வாருங்கள்.புதிதாக எந்த வேண்டுகோள் லிஸ்ட்டும் வைக்காதீர்கள்.உங்களுக்கு என்ன தேவை என்பது தெய்வத்திற்கு நன்றாக தெரியூம்.
இதைச் செய்தால் வாழ்வூ சிறக்கும்.கஷ்டங்கள் விலகும்.செய்து பாருங்கள் புரியூம்.
ConversionConversion EmoticonEmoticon