கிட்டத்தட்ட டிசம்பர் மாத இறுதியில்தான் இது நிகழ்ந்தது.தனுசு ராசியில் ஆறுகிரகச் சேர்க்கை அபூர்வமாக நிகழ ஆரம்பித்தபோதே அது பற்றி பேஸ்புக்கில் எச்சரித்திருந்தேன்.அப்போது பெரும்பாலான ஜோதிடர்கள் அப்படி ஒன்றும் பெரிய ஆபத்து நேராது.இது சாதாரணமானதுதான் என்பது போன் கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள்.ஆனால் இது எப்படி ஆபத்தாக அமைகிறது என்றால் ஆறுகிரகங்கள் ஒரே வீட்டில் அமர்ந்து அங்கிருந்து ராகுவைப் பார்க்கிறபோது ராகு அமர்ந்திருக்கும் நட்சத்திரம்தான் இதில் ஒரு நுட்பமாக நிகழ்வை அப்போது ஏற்படுத்தி விட்டது.
என்னுடைய கணிப்பின்படி இது நாகர்களை எழுப்பி விட்டிருக்கிறது எனலாம்.புராண கதைகளின்படி நாகர்கள் என்பவர்கள் விஷத்தன்மை கொண்ட பாம்புகளாக இருப்பவர்கள்.அவர்கள் இந்த பூமிக்கு அடியில் பாதாளத்தில் வசிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.அவர்கள் பாட்டுக்கு அவர்களது வேலைகளைப் பார்த்துக் கொண்டு உள்ளே இருக்கும் வரை எந்த தொந்தரவூம் இல்லை.அவர்களை சீண்டி விட்டு அவர்கள் திரும்பிப்பார்த்து ஒரு மூச்சுக்காற்றை வெளியில் விட்டால் கூட அது பூமியைப் பிளந்து கொண்டு வெளியே விஷக்கிருமிகளாக வந்து விடும்.இது புராண அடிப்படையிலான கற்பனை.
ஆனால் இதுதான் நுட்பமாக இப்போது நடந்திருக்கிறது.கூடுதலாக திருவாதிரை நட்சத்திரம் வெடிக்கப்போவது பற்றிய கலப்பும் இங்கே ஆராய்ந்து பார்க்கத் தக்கது.
இப்படி நாகர்களின் விஷத்தன்மையை ஒரு கற்பனைக் கதை போல பார்த்தால் விஷயத்தின் தீவீரம் புரியூம்.ஏதோ ஒரு ரகசிய ஆராய்ச்சியை (அணுஆராய்ச்சி போன்ற ஏதாவது) ஏதோ ஒரு நாடு பூமிக்கடியில் நிகழ்த்தியிருக்கிறது.அதன் விளைவாக பூமிக்கு அடியிலிருந்து விஷத்தன்மை வெளியே கிளம்பியிருக்கிறது.இப்படி சொல்கிறீர்களே இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் இதற்கெல்லாம் ஆதாரம் கிடையாது.ஜோதிடரீதியிலும் கற்பனையான விஷயங்களை வைத்தும்தான் இந்த பிரச்சனையைச் சொல்ல முனைகிறேன்.
இந்த ஆறுகிரகங்கள் ராகுவைப் பார்க்க ஆரம்பித்ததால் இது குறிப்பாக டிசம்பர் 26ம் தேதியிலிருந்து பிரச்சனைக்கு ஆரம்பப்புள்ளியை வைத்து விட்டது.சரி இது இப்போது மட்டுமே பெரிதாக வெடித்திருக்கிறதே அதற்கு காரணம் என்ன என்று கேட்டால் ஜனவரி மாதமே கொரோனா வைரஸ் பற்றிய செய்தி வெளியே வந்து விட்டது.நமது "சரவணபவம்" யூடியூப் சேனலில் கூட இது பற்றி அப்போதே ஒரு எச்சரிக்கை விடியோ போட்டிருந்தேன்.
ஜனவரியில் ஆரம்பித்த இந்த கொரோனா இத்தாலி போன்ற முன்னேறிய நாடுகளைத் தாக்கியிருந்தாலும் இங்கே இந்தியாவில் இன்னமும் பெரிதாக தாக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
பொதுவாக நமது நாட்டில் அதாவது தமிழ்நாட்டுப்பகுதிகளில் வெய்யில் காலம் துவங்க இருக்கும்போதுதான் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் மாவிளக்கு போடுதல் போன்ற வழிபாடுகள் நடக்கத் தொடங்கும்.இங்கே உள்ள மக்களை மாரியம்மன்தான் காத்துவருகிறாள்.பொதுவாக கொள்ளை நோய் ஏற்படும் காலங்களில் எல்லாம் மாரியாத்தாதான் காப்பாற்றுகிறாள் என்பது உண்மையூம் கூட.அவள்தான் இப்போது வரை மக்களை காப்பாற்றி வருகிறாள்.
நாகர்களின் (அதாவது விஷக்கிருமிகள் வழியாக) தாக்குதலில் சிக்கித் தவிக்கும் உலகைக் காப்பாற்ற ஏதாவது உலகியல் ஜோதிடப் பரிகாரம் இருக்கிறதா என்றால் நிச்சயம் இருக்கிறது.
எந்தெந்த கோவில்களில் எல்லாம் சிவன் "நாகநாதர்" என்ற பெயரில் அழைக்கப்படுகிறாரோ அந்த கோவில்களில் எல்லாம் சிவனுக்கு விசேஷ அபிசேஷ ஆராதனைகள் செய்ய வேண்டும்.இயன்றால் ரூத்ராபிசேஷமும் செய்யலாம்.அப்படி செய்தால் மட்டுமே இது கட்டுக்குள் வரும் என்பது ஜோதிடரீதியிலான எனது கணிப்பு.
இறைசக்தியை வணங்குவோம்.கொரோனா போன்ற கொள்ளை நோயை வெல்வோம்.
ConversionConversion EmoticonEmoticon