இது பலவருடங்களுக்கு முன்னர் நடந்தது.இப்போதுதான் நடந்தது போல இருக்கிறது.அப்போது நான் பிசினஸில் தீவீரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.அத்துடன் ஜோதிடத்தையூம் தொழிலாக வைத்திருந்தேன்.பெரும்பாலும் பெரிய தொழிலதிபர்களும் ஷேர்மார்க்கெட்டில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுமே அப்போது எனது வாடிக்கையாளர்களாக இருந்தார்கள்.அப்போது ஒரு நாள் அசந்து உறங்கிக் கொண்டிருந்த விடியற்காலையில் ஒரு கனவூ வந்தது.இரவூ முழுக்க ஏதேதோ வேலைகள்.சாப்ட்வேரிலும் சில பல வேலைகளை செய்து வந்ததால் இரவூ சரியான உறக்கமில்லை.பின்னிரவில் உறங்க ஆரம்பித்து விடியற்காலையில் மூன்றரை மணிக்கு மேலிருக்கும்.ஒரு கனவூ.அந்த கனவில் ஒரு மகான் வருகிறார்.அவர் மெலிந்த தேகத்துடன் தீட்சண்யமான விழிகளுடன் ஒட்டிய வயிற்றுடன் மெல்ல நடந்து வந்து என்னை அழைக்கிறார்.அப்புறம் அவர் அருகில் என்னை அமர வைத்து தன் வலது கரத்தை உயர்த்தி என்னை ஆசீர்வதித்து எதையோ முணுப்பாக சொல்கிறார்.அந்த கனவூ அத்துடன் கலைந்து போயிற்று.வீட்டிற்கு முன்னாலிருந்த மரத்திலிருக்கும் குயில் குக்கூவெனக் கூவ விழித்துக் கொண்டேன்.
என்ன கனவூ இது.யாரந்த மகான்.என்னிடம் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் அந்த தவிப்பு சில நாட்கள் வரை இருந்தது.அப்புறம் அதைமறந்து விட்டு வழக்கமான வேலைகளில் பிசியாகி விட்டேன்.
அப்புறம் சில மாதங்கள் கழித்து ஸ்ரீகாஞ்சி மகாபெரியவரை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது.அப்போது கூட்டத்தில் ஒருவனாக நின்று கொண்டிருந்தேன்.அவர் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை;.வந்தவர்கள் ஒவ்வொருவராக அவரை தரிசித்து விட்டு செல்ல ஆரம்பித்தார்கள்.எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.அவரை சென்று தரிசிக்கலாமா வேண்டாம் என்று கிளம்பி விடுவோமா என்று தவித்துக் கொண்டிருந்தபோது மடத்து ஆளை அனுப்பி என்னை அவரருகே வரச்சொன்னதாகச் சொன்னார்கள்.தவிப்பான மனதுடன் அவரை அருகே சென்று வணங்கியபோது அந்த தீட்சண்யம் மிக்க விழிகளில் அதே பார்வை.அந்த பார்வை எதையோ உணர்த்தியது போலிருந்தது.
"அதான் அன்னிக்கே என்னை தரிசனம் பண்ணிண்னுட்டியே..இன்னுமா விளங்கலை" என்றார்.அப்போதுதான் புரிந்தது எனக்கு.
அன்று என் கனவில் அதிகாலையில் வந்த மகான் இவர்தானா?
இது என்ன ஆச்சர்யம்.எதற்காக இந்த விளையாட்டு?
அப்புறம் அவர் என்னிடம் சொன்னது இதுதான்.
நீ ரொம்ப பிசியாக இருக்கிறாய்.ஷேர் டிரேடிங் அது இதுன்னு பல பேரை வாழ வைச்சுண்டிருக்கே.ஆனா எதற்காக நீ பணத்தின் பின்னால் ஓடற.அது உன் பின்னாடி ஓடி வரப்போற காலம் ஒண்ணு வரப்போகுது உன்னைத் தேடி அத்தனை விதமான செல்வங்களும் வரும்.அதனால நீ இனிமே ஜோதிடத்துல உன் திறமையைப் பயன்படுத்து.உன்னால எதையூம் சூட்சுமமா உணர்ந்துக்கற சக்தி இருக்கு.அந்த காமாட்சி அம்மனின் அருட்கடாட்சம் உனக்கு ஏராளமா இருக்கு.அதனால இன்னிலேர்ந்து நீ ஜோசியம் பார்த்து பலன் பரிகாரம் கொடு.இதை இலவசமா செய்யாத.அப்படி செஞ்சா அதை நீ சேவைன்னு நினைக்கலாம்.ஆனா இலவசமா கொடுத்தா மதிப்பிருக்காது.தவிர உன் கணக்குல இலவசமாக பலன் பார்க்கறவாளோட கர்மா சேரும்.அதனால சாதாரணமா ரெண்டாயிரம் ரூபா நீ ஒரு ஜாதகத்துக்கு வாங்கலாம்.பெரிய பணக்காரா வந்தாள்னா அவாளுக்கு பார்க்கறச்ச பெரிய தொகையா கேட்டு வாங்கிக்க.அவா நீ கேட்கற தொகையை கொடுப்பா.அதனால இன்னிலேர்ந்து நீ ஜோசியத்துலயூம் உன் திறமையைக் காட்டு.இன்னி தேதியில நிறைய பொண்களுக்கு அவா எத்தனை பெரிய உத்யோகம் பார்த்துண்டிருந்தாலும் கல்யாணமாகாம அவாளோட பெத்தவா தவிச்சுண்டிருக்கா.உன்னாலதான் அவாளோட திருமணத்தடையை உடைக்க முடியூம்.அதுக்கான ஜோதிட நுட்பம் உங்கிட்ட இருக்கு.அத்தோட நீ விரும்பற திரைப்படத்துறையூம் உன் பின்னால ஒரு நாள் வரும்.அதுவரை பொறுமையா ஜாதகம் பார்த்து பலன் சொல்லிண்டிரு அப்படின்னு சொல்லி கனவூல வந்தது போலவே அதே போல கையை உயர்த்தி ஆசி வழங்கினார்.
வெளிய வந்தபோது ஸ்ரீமடத்து ஆசாமி ஒருத்தர் என்னன்ட சொன்னது இதுதான்.இது போல யாருக்கும் இத்தனை உசரத்துல கையை உயர்த்தி மகாபெரியவா இது போல ஆசி வழங்கினதில்ல.உனக்கு சர்வ நிச்சயமா ஸ்ரீகாமாட்சி அம்மனோட அருட்கடாட்சம் இருக்குன்னு தோணறது எனக்கு.போய்ட்டு வா நீ அமோகமா இருப்பே என்று அந்த மனிதர் சொல்லி புன்னகைத்தது இன்றுதான் நடந்தது போல இருந்தது.
மகான்கள் அவ்வளவூ எளிதில் யாருக்கும் அருள் புரிந்து விடுவதில்லை.கடவூள் கூட ஒரு கட்டத்தில் பிடிவாதமான பக்திக்கு மனம் இறங்கி விடுவார்கள்.ஆனால் மகான்கள் அவர்கள் நினைத்தால் மட்டுமே ஆசியூம் அருளும் வழங்குவார்கள் என்பது நிதர்சமான உண்மை.
ஸ்ரீமகாபெரிவா பாதம் போற்றி.
ConversionConversion EmoticonEmoticon