இது ஒரு அனுபவப் பகிர்வூ.எனது ஜோதிட வாடிக்கையாளர்களில் பலவிதமான மனிதர்களை சந்திக்க நேரிடுகிறது.சிலர் கடுமையான பிரச்சனையோடு வந்து ஏதாவது செய்து சரி செய்துகொடுங்கள் என்று சொல்வதுண்டு.அது போல அண்மையில் ஒருத்தர் வந்திருந்தார்.அவருடைய அம்மாவிற்கு திடீரென உடல் இளைத்துக் கொண்டே வந்திருக்கிறது.அந்த அம்மாவிற்கு வயது எழுபதிற்கு மேலிருக்கும்.உடல் நலிவிற்கு காரணம் தெரியவில்லை.பல இடங்களில் பார்த்திருக்கிறார்கள்.கடைசியாக ஒரு பிரபல கார்ப்பரேட் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது இருபது விதமான ஸ்கேன் பரிசோதனைகளை செய்து விட்டு அந்த வயதான பெண்ணிற்கு கருப்பை அருகே சிறிய கட்டி (அதை சிஸ்ட் என்று சொல்வார்கள்) இருப்பதால் அதனை மட்டும் அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.அந்த தகவலை என்னிடம் சொன்ன அந்த அன்பர் ஆபரேஷன் செய்யலாமா என்று கேட்டிருந்தார்.அந்த பையனின் ஜாதகத்தையூம் பார்த்து விட்டு அவரது அம்மாவின் ஜாதகத்தையூம் பார்த்து விட்டு ஒரு சூட்சுமக்கணக்குப் போட்டுப் பார்த்தபோது நடக்கப்போகும் விபரீதம் புரிந்தது.
ஆபரேஷனெல்லாம் வேண்டாம்.இதனை சூட்சுமப்பரிகார முறையில் சரி செய்து விடலாம் என்று தெரிவித்தேன்.அதற்கிடையே அந்த மருத்துவமனையிலிருந்து தொலைபேசியில் விடாது அனத்தியிருக்கிறார்கள்.எப்போது ஆபரேஷனுக்கு அழைத்து வருகிறீர்கள் என்று.அந்த அம்மாவை வேறு வழியில்லாமல் ஆபரேஷனுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.அவரை அழைத்துச் சென்றது ஒரு சிறிய சிஸ்ட் எனப்படும் சிறு கட்டியை அகற்றுவதற்கு.அந்த அம்மாவை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்ற பிறகு அந்த பையனிடம் உள்ளேயிருந்து சீஃப் டாக்டர் தகவல் சொல்லச் சொன்னார் என்று குண்டைத் துரக்கிப் போட்டிருக்கிறார்கள்.
சிஸ்ட் மட்டும் அகற்றினால் போதாதாம்.அந்த அம்மாவின் கருப்பையையூம் சேர்த்தே அகற்றி விட வேண்டுமாம்.அதுதான் நல்லது என்றிருக்கிறார்கள்.உண்மையில் அந்த சிறு கட்டி எனப்படும் சிஸ்ட் கருப்பைக்கு தள்ளி இருக்கிறது.இதற்குமு; கருப்பைக்கும் சம்பந்தமில்லை.இதனை உடனே அந்த பையன் எனக்கு தெரிவித்தபோது வேண்டாம் என்று சொல்வதா எப்படி சொல்வது இதை விட ஒரு பயங்கரம் அந்த அம்மாவிற்கு காத்திருக்கிறதே என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அந்த பையனின் தொடர்பு அற்றுப் போனது.
அப்புறம் கிடைத்த தகவல்.
அந்த பையன் மற்றவர்களின் வற்புறுத்தலால் தன் அம்மாவின் கருப்பையை எடுக்கச் சொல்லி விட்டாராம்.இத்தனை வயதிற்கு பிறகு கருப்பை எதற்கு என்ற எண்ணம்.ஆபத்தான சூழ்நிலையில் வேண்டுமானால் கருப்பையை அகற்றலாம்.மற்ற நேரங்களில் அதை அகற்றினால் அது ஒருவரின் கை காலை அகற்றுவதற்கு சமம்.அந்த மனிதரின் சூட்சும உடல் இந்த ஸ்துரல உடலில் ஏற்பட்ட பங்க இழப்பை எண்ணித் துடிக்கும்.
அதன்பிறகு அந்த பையன் மறுபடி வந்தார்.
"என்ன இப்ப ஏதாவது குண்டை துரக்கிப் போட்டிருப்பாங்களே.இதுவரை எத்தனை லட்சம் செலவாச்சு" என்று கேட்டேன்.
"ஆமா சார்.இப்பவே அஞ்சு லட்சம் பில் ஆச்சு.இன்சூரன்ஸ் கிடையாது.எழுபது வயசுக்கு மேல தரமாட்டாங்க.இப்ப பயாப்ஸிக்கு அனுப்பனும்.சந்தேகமா இருக்குன்னு சொல்றாங்க விஜய் சார்" என்றார் பரிதாபமாக.
இதற்குத்தான் சொன்னேன்.ஆபரேஷன் வேண்டாம் என்று என நினைத்துக் கொண்டேன்.ஒருவருக்கு கேன்சர் இருப்பதாக சந்தேகப்பட்டால் முதலிலேயே பயப்ஸி செய்த பிறகுதான் சிஸ்ட்டில் கை வைக்க வேண்டும்.அதன்பிறகு கேன்சர் உறுதி செய்யப்பட்டால்தான் அதுவூம் அது கருப்பையை தாக்கக்கூடும் என்றால் மட்;டுமே கருப்பையை அகற்ற வேண்டும்.இவர்கள் தலைகீழாக செய்திருக்கிறார்கள்.இதற்கு காரணம் பல இருக்கலாம்.ஆனால் படாதபாடு படப்போவது அந்த அம்மாள்தான்.
"இப்ப ஏதாவது செய்யூங்க சார்.அம்மாவை காப்பாத்தனும்.எவ்வளவூ செலவானாலும் பரவாயில்லை" என்றார்.
வருத்தமாக இருந்தது.முதலில் அவர் தொடர்பு கொண்டபோது இது போன்ற சிக்கலான பிரச்சனைகளுக்கு எளிய கட்டணமாக சூட்சுமப்பரிகாரத்திற்கு ரூ 25555 கட்டணமாகவூம் அந்த பரிகாரத்தை செய்து முடிப்பதற்குரிய செலவினங்களுக்காக இன்னொரு ரூ 25555 ஆகும் என்று தெரிவித்திருந்தேன்.இதுவே மற்றவர்கள் என்றால் லட்சக்கணக்கில் தீட்டியிருப்பார்கள்.இதுவே அதிகம் என்று அப்போது பதில் கூறாமல் சென்ற அந்த பையன் இப்போது என்ன செலவானாலும் சரி என்கிறார்.இதுதான் சில நேரங்களில் சில கிரகங்கள் ஆடும் கெட்ட ஆட்டம்.
அவர் இந்த கட்டணத்திற்கு ஒப்புக் கொண்டபிறகு அவர் பணம் செலுத்தியவூடன் அந்த அம்மாவிற்கான சூட்சுமப்பரிகாரத்தை கண்டறிய அதற்குரிய தியானத்தில் அமர்ந்து விட்டேன்.இரண்டு நாட்கள் இதே நினைப்பாக தொடர்ந்து தியானம்.பூஜைகள் என்று கழிந்தது.அதன்பின்னர் ப்ளாஷ் அடித்தது போல அந்த அம்மாவிற்கான சூட்சுமப்பரிகாரம் என் மனதில் தோன்ற அதை அந்த பையனிடம் சொல்லி விட்டு அதனை அதற்குரிய ஒரு கோவிலில் சென்று செய்ய ஆரம்பித்தேன்.தொடர்ந்து ஆறுநாட்கள் இதனை செய்து முடித்து விட்டு-
"இப்ப பயாப்ஸிக்கு சாம்பிள் எடுத்து அனுப்பச் சொல்லுங்கள்.ஒரு வாரம் தாமதித்திற்கு மன்னிக்கவூம் என்று ஏதாவது சொல்லி மருத்துவமனையில் சமாளித்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னதும் அதே போல அந்த பையன் செய்திருக்கிறார்.
அப்புறம் பயாப்ஸி ரிசல்ட் வந்திருந்தது.அவருக்கு கேன்சர் இல்லை.ஆறுநாட்கள் முன்னதாக டெஸ்ட் செய்திருந்தால் கேன்சர் இருந்திருக்குமா என்று நீங்கள் சந்தேகிக்கலாம்.காரணம் அதுவல்ல.அந்த அம்மாவிற்கு கேன்சரே இல்லை.சும்மா டெஸ்ட் அனுப்பி அதனை கேன்சர் என்பதாக மெடிக்கல் ஸ்பெகுலேஷன் செய்து விடலாம் என்று எண்ணியிருக்கிறார்கள்.நான் கொடுத்த சூட்சுமப்பரிகாரமும் அதனை நான் செய்து முடித்ததும் அப்படி மெடிக்கல் ஸ்பெகுலேஷன் செய்ய நினைத்தவர்களின் மனதில் பயத்தை ஏற்படுத்தி அவர்களை அது போல செய்ய விடாமல் தடுத்திருக்கிறது.இல்லையென்றால் அந்த அம்மாவை கேன்சர் பேஷன்ட் என்று லேபிள் குத்தி அவருக்கு கீமோதெரபியெல்லாம் ஆரம்பித்து குற்றுயிரும் குலை உயிருமாகக் கொண்டு வந்து போட்டிருப்பார்கள்.அந்த அம்மாவூம் சிகிச்சை தாங்காமல் செத்துப் போயிருப்பார்.
குறைவான கட்டணத்தில் இதனை செய்து கொடுத்திருந்தாலும் ஒரு உயிரை காப்பாற்றிய திருப்தி நமக்கு.அந்த பையன் இனி தன் உத்யோகத்தை அம்மாவின் உடல்நலம் பற்றிய பயம் இல்லாமல் தொடர்வார்.
ConversionConversion EmoticonEmoticon