ஒருவர் எத்தனை இடர்பாடுகளை சந்தித்துக் கொண்டிருந்தாலும் அதனை இரண்டு பேர்களை மட்டும் வைத்து சரி செய்து விடலாம்.எல்லோருடைய ஜாகதத்திலும் உள்ள கிரகங்களை அதன் தன்மை வலிமை நன்மை தருமா தீமை தருமா என்று இரண்டு பக்கமும் மதிப்பெண் போட்டுக் கொண்டே வந்தால் அந்த கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம்தான் மிக அதிக நன்மை தருவதாக(சிலருக்கு ஒன்றுக்கு மேல் இருக்கும்) தருவதாக இருக்கும்.ஏதாவது ஒரு கிரகம்தான் மிக அதிக கெடுதல் தருவதாக இருக்கும்.
இப்போது இந்த இரண்டு கிரகங்களையூம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நன்மை தரும் கிரகங்களுக்கு அது தந்த தருகின்ற மற்றும் தரப்போகின்ற நன்மைகளுக்கெல்லாம் நன்றி தெரிவித்து அந்த கிரகத்தின் காரகத்துவம் பெற்ற நாளில் (முடிந்தால் அதன் ஹோரையில்) கோவிலுக்குச் சென்றௌ வீட்டிலோ விளக்கேற்றி வழிபட்டு நன்றி சொல்லி வாருங்கள்.
அதே போல தீமை செய்யூம் கிரகத்தை தன் காரகத்துவம் பெற்ற நாளில் கோவிலுக்கோ வீட்டிலோ விளக்கேற்றி நீ என்ன செய்தாலும் நான் உன் குழந்தையைப் போன்றவன்.உன்னை மிகவூம் நேசிக்கிறேன்.நீ அருமையானவன்.அன்பானவன்.அடித்தாலும் உதைத்தாலும் உன்னையே நேசிக்கிறேன் என்று மனமுருக பிரார்த்தனை செய்து வாருங்கள்.
நல்ல கிரகம் மேலும் நன்மை செய்ய ஆரம்பித்து விடும்.
தீய கிரகம்...அட இவனைப் போய் வதைக்கிறௌமே என்னதான் கர்மா அப்படி இருந்தாலும் நம்மால் ஆன வகையில் இவனுக்கு உதவலாமே என்று மனம் மாறி உதவி செய்ய வாய்ப்பிருக்கிறது.
வாழ்த்துக்கள்!
ConversionConversion EmoticonEmoticon