இப்போது ஒரு புதிய ஜோதிடபீதி கிளம்பியிருக்கிறது.தனுசுராசியில் ஆறு கிரகங்களின் சேர்க்கை அமைப்பு வரும் 25 26 மற்றும் 27ம் தேதிகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்றும் அதன் காரணமாகத்தான் நாடு முழுக்க போராட்டங்களும் நெருப்புச்சிதறல்களும் காணப்படுகின்றன என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் தீ போல பரவி வருகின்றன.இதை வாசித்த அன்பர்கள் பலரும் கோவில்களுக்குச் சென்று பரிகார விளக்குகள் ஏற்றியூம் வருகிறார்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால் ஆறு கிரக சேர்க்கை என்பது எப்போதாவது ஏற்படக் கூடியதுதான்.இதில் நெகட்டிவ்வாகப் பார்த்தால் இதனை ஒரு கிரக யூத்தம் என்று சொல்லலாம்.பாசிட்டிவ்வாகப் பார்த்தால் இதனை ஒரு கெட்டிக்காரக் கூட்டணி என்றும் சொல்லலாம்.
எனினும் பழமைவாய்ந்த ஜோதிட விதிகளின்படி தற்போதைய கோள்சார ரீதியில் ரிஷபம் தனுசு மற்றும் மீனராசிக்காரர்களுக்கு மட்டுமே ஆபத்து நிகழ வாய்ப்பிருக்கிறது.அந்த ஆபத்து என்பது நிலைப்படியில் முட்டிக் கொள்வதாக இருக்கலாம்.தரையில் வழுக்கி விழுவதாக இருக்கலாம்.பலத்த விபத்தில் மாட்டிக் கொள்வதாக இருக்கலாம்.சாப்பிடும் உணவே அலர்ஜியாகி என்ன ஏது என்று தெரியாமல் அவஸ்தைப் பட வைக்கலாம்.ஆனால் மாரகம் என்கிற பெரிய விஷயம் ஏதும் உடனடியாக நடந்து விடாது.யாருக்கு பெரிய பாதிப்பு இருக்கும் என்றால் அவர்களது சுயஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் இந்த கோள்சார அமைப்பை ஒத்த மாதிரி ஓரிரு கிரகங்கள் அமைந்திருந்தால் (அதாவது உதாணரமாக ஒருவரது பிறப்பு ஜாதகத்தில் தனுசில் சனி செவ்வாய் இருந்தால் இப்போது அதே போல சனி செவ்வாய் மற்ற கிரகங்களுடன் வரும்போது பாதிப்பு வரும்.)
ரிஷபராசிக்காரர்களுக்கு குரு கெட்ட கிரகம்.அதாவது நல்லது செய்ய மாட்டான்.காரணம் அவன் அஷ்டமாபதி.அதனால் ரிஷபராசிக்கார்களுக்கு இது போதாத காலமே.
தனுசுராசிக்காரர்களுக்கு ராசியிலேயே ஆறு கிரகங்கள் என்பது "குரு"வித் தலையில் பனங்காய் வைத்த மாதிரி கஷ்டமாகத்தான் இருக்கும்.
மீனராசிக்காரர்களுக்கு பத்தாம் இடமாக அதுவூம் ராசியாதிபதியாகவே இருக்கும் குருவின் தனுசுராசியில் மற்ற கிரகங்களுடன் சனி கர்மஸ்தானத்தில் இருப்பதால் மீனராசிக்காரர்களின் நெருங்கிய உறவினர் (குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் உடல் பருமனாக ஒபிஸிடி உள்ளவர் யாரேனும் உறவினராக இருந்தால் அவருக்கு) யாருக்கேனும் உயிருக்கே ஆபத்து வரக்கூடிய நிலை வரலாம்.இது மிக அரிதான ஒன்று.
மேற்படி மூன்று ராசிக்காரர்களும் இந்த மூன்று நாட்களும் வெளியில் அதிகம் செல்லாமல் அமைதியாக அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்.
ConversionConversion EmoticonEmoticon