ஒருவருக்கு திருமணம் சரியாக நடக்காமல் போனால் அடுத்த வரும் அவரது வாழ்க்கை மட்டுமல்ல அவரது தொழில் உத்யோகம் எல்லாமே நசிந்து போய் விடும்.என்னதான் திறமையூம் அழகும் வசதியூம் இருந்தாலும் திருமணம் மட்டும் சரிவர அமையவில்லை என்றால் பொருத்தமான மனைவி வரவில்லையென்றால் அதன்பின் வாழ்வது வீண்தான் என்பதை பலரும் உணர்ந்திருப்பார்கள்.இது போன்ற தப்பிதமான பொருந்தாத வாழ்க்கை எப்படி ஏற்படுகிறது என்பதை விட அந்தக்காலத்தில் மட்டும் எப்படி திருமணங்கள் கசக்காமல் வாழ்க்கையை விட்டுக் கொடுத்து சுகமாக வாழ்ந்தார்கள் என்று பார்க்கலாம்.
அப்போதெல்லாம் பெண்பார்க்கும் வைபவம் என்பதே குதுரகலமான ஒன்றாக இருக்கும்.சொந்தக்கார் இருக்காது.வாடகைக்காரில்தான் செல்வார்கள்.குதிரை வண்டி கட்டிக் கொண்டு செல்வோரும் உண்டு.உறவினர்கள் நண்பர்கள் அக்கம்பக்கத்து வீட்டிலுள்ள பெரியவர்கள் உடன் வருவார்கள்.அப்படி வருபவர்களில் ஒரு தொழில்முறை ஜோதிடர் கட்டாயம் இருப்பார்.அப்படி இல்லையென்றால் அவர்களில் ஒருவருக்கு நன்றாக ஜோதிடம் தெரிந்திருக்கும்.பெண்பார்க்க பெண் வீட்டிற்குள் செல்வதிலிருந்து அந்த ஜோதிடர் அல்லது ஜோதிடம் தெரிந்த அன்பரின் மனம் பிரசன்னம் போட ஆரம்பித்து விடும்.
பெண்பார்க்க அமர்ந்திருக்கும்போது பெண்ணை அழைக்கும்போது அந்த பெண் காபி ட்ரேயூடன் கூடத்திற்கு வந்து பையனை நிமிர்ந்து பார்க்கும்போது சட்டென்று பிரசன்னம் போட ஆரம்பித்து விடுவார்கள்.ஆனால் இதனை வெளியில் சட்டென்று சொல்ல மாட்டார்கள்.அந்த நிமிடத்து கணக்கே இந்த வரன் கூடி வருமா வராதா என்பதைத் துல்லியமாகச் சொல்லி விடும்.
இது எதனால் அப்படி என்றால் பெண்கள் உணர்வூப் பூர்வமானவர்கள்.சந்திரனின் நிலையூம் அப்படித்தான்.உணர்வூப்பூர்வமானது.ஒரே இடத்தில் நிலையாக இல்லாதது.அந்த பெண்ணின் மனம் எப்படி இருக்கும்.சந்திரனின் நிலைப்பாடு அந்த தருணத்தில் எப்படி இருக்கிறது என்பதை வைத்தே அந்தப் பெண் அனுசரித்துப் போவாளா அல்லது பிடிவாதக்காரியாக இருந்து பையனின் வாழ்வை நாசமாக்கி விடுவாளா என்பதை சந்திரனை வைத்து கணிப்பார்கள்.அப்புறம்தான் சுக்கிரன் ராகு கேது போன்ற மற்ற கிரகங்களை கணக்கில் சேர்த்துக் கொள்வார்கள்.அதன் பின்னர்தான் பாவகப் பலன்கள் தசாபுத்தி பலன்கள் கோள்சார பலன்கள் என்று அணிவகுத்து வருபவற்றை துணைக்கு வைத்துக் கொள்வார்கள்.
ஒரு திருமணம் வெற்றியா தோல்வியா என்பதை பெண்ணின் ஜாதகத்திலுள்ள சந்திரனின் நிலையே காட்டிக்கொடுத்து விடும்.பையன் ஜாதகத்தில் இது சற்று மறைவாகத் தெரியவரும்.
ஆணிற்கு சுக்கிரன் பெண்ணிற்கு செவ்வாய் போன்றதெல்லாம் அப்புறம்தான்.முதலில் மனோகாரன் சந்திரன் நன்றாக இருக்க வேண்டும்.அப்போதுதான் மணவாழ்க்கை இனிக்கும்.
ConversionConversion EmoticonEmoticon