முன்பெல்லாம் நடுத்தர வீடுகளில் நீங்கள் கவனித்திருக்கலாம்.வராந்தா போன்ற இடத்தில் செருப்புகள் கிடக்கும்.பழைய துணிகள் ஒன்றிரண்டு கிடக்கும்.ஒரு துடைப்பக்கட்டை கிடக்கும்.காலியான கேஸ் சிலிண்டரும் அதன் மேல் அழுக்கடைந்த பழைய துணியூம் கிடக்கும்.கிட்டத்தட்ட அந்த இடத்தில் மாடிப்படியின் கீழ்ப்பகுதியாக வரும்.அங்கே பழைய செய்தித்தாள்களையூம் பத்திரிகைகளையூம் போட்டு வைத்திருப்பார்கள்.அது போன்ற அமைப்புள்ள வராந்தா உள்ள வீடுகளைப் பார்த்தீர்களானால் அந்த வீட்டில் செல்வம் சேராது.அவர்கள் பற்றாக்குறை பட்ஜட்டுடன் நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்களாக இருக்கலாம்.
இப்போதைய சூழலில் அது போன்று செய்தித்தாள்களை யாரும் வாங்குவதில்லை.பத்திரிகைகளையூம் வாங்கிப் படிப்பதில்லை.ஆனால் இதே போன்ற பழைய துணிகள் கேஸ்சிலிண்டர் துடைப்பக்கட்டை மற்றும் பழைய பேப்பர்கள் போட்டு வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.இப்படி பழைய பேப்பர்களை வராந்தாவில் அதாவது வீட்டிற்கு முன்புறம் பத்திரிகைகளைப் போட்டு வைத்திருந்தால் அந்த வீட்டில் பணம் சேராது.காரணம் பத்திரிகைகள் என்பவை புதன் கிரகத்தின் ஆளுமைக்குட்பட்டவை.பொன்கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள்.அப்படிப்பட்ட புதனை அலட்சியமாக வீட்டுக்கு வெளியே போட்டு வைத்திருந்தால் அது நிச்சயம் அந்த வீட்டில் செல்வத் தடையை ஏற்படுத்தத்தான் செய்யூம்.
எனக்குத் தெரிந்து ஒரு பத்திரிகையூலக ஜாம்பவான் தன்னுடைய சொந்த பத்திரிகை அலுவலகத்தை தன்னுடைய வீட்டின் கார் ஷெட்டில் வைத்து நடத்திக் கொண்டிருந்தார்.கார் ஷெட்டில் தட்டுமுட்டு சாமான்களுடன் அந்த பத்திரிகை இயங்கிக் கொண்டிருந்தது.அவர் பத்திரிகை என்ற "புதன்" அம்சத்ததை தன்னுடைய வீட்டுக்கு வெளியே வைத்து நடத்தியிருந்தார்.அதன் பலனாக அவர் புகழ் மிக்கவராக இருந்தாலும் கடைசி வரை செல்வச் செழிப்பில் வாழாமல் பத்திரிகையையூம் நஷ்டத்தில் நடத்தி கடைசியில் பத்திரிகையை அவரே மூடி விடக் கூடிய சந்தர்ப்பமும் அமைந்து விட்டது.
பத்திரிகை மட்டுமல்ல.காகிதங்கள்.வீட்டிற்கு வந்திருந்த திருமண அழைப்பிதழ்கள்.நோட்டீஸ் விளம்பரங்கள்.நகைக்கடை குறிப்பேடுகள் போன்ற எதையூம் அதாவது காகிதம் சம்பந்தப்பட்ட எதையூம் வீட்டுக்கு வெளியே வராந்தா போன்ற இடத்தில் போட்டு வைக்காதீர்கள்.அவை செல்வத்தை வீட்டிற்குள்ளே விடாமல் தடுத்து விடும்.
ஏனென்றால் புதன் அனுமதிக்காமல் ஒரு இடத்தில் செல்வம் சேராது.புரிந்து கொள்வீர்.
ConversionConversion EmoticonEmoticon