இது ஒரு பழமொழி.வாய் உள்ள பிள்ளைதான் பிழைக்கும் என்பார்கள்.எந்த சூழ்நிலையாக இருந்தாலும் பேசத் தெரிந்த பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்பது மேம்போக்கான அர்த்தமாக இருக்கும்.இதனை ஜோதிடரீதியாகப் பார்த்தால் செவ்"வாய்" உள்ள பிள்ளை எப்படியூம் பிழைத்துக் கொள்ளும் என்பதுதான் அதில் உள்ள அர்த்தம்.
ஒருவரது ஜாகதம் பாதகமாக நிலையில் இருந்தாலும் ஏன் லக்னாதிபதியே பலம் குறைந்த நிலைமையில் நீச்சமாகவோ பகை வீட்டிலோ அல்லது பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டிருந்தாலோ அந்த ஜாதகரின் சுயஜாதகத்தில் செவ்வாய் மட்டும் நல்ல நிலையில் இருக்குமானால் வேறெந்த கிரகத்தின் தயவூம் தேவையில்லை.செவ்வாயை மட்டும் வைத்துக் கொண்டு பிழைத்துக் கொள்ளலாம்.
செவ்வாய் என்பது ஒரு பாவ கிரகமாகவே இருந்தாலும் அது ஒரு வீரபராக்ரம கிரகம்.அந்த கிரகத்தின் நிலை நல்லவிதமாக அதாவது அது ஒரு நல்ல வீட்டில் அமைந்திருந்தால் அதனால் பார்க்கப்படும் 4, 7, 8ம் வீடுகள் பலம் பெற்று அந்த ஜாதகருக்கு வாழ்வில் பலவிதமான ஏற்றங்களைக் கொடுத்து விடும்.
இதில் என்ன ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டுமென்றால் அதே வீரபராக்ரம கிரகமான செவ்வாய் சுய வலு பெறக் கூடாது.உதாரணமாக விருச்சிகத்திலோ மேஷத்திலோ செவ்வாய் அமர்ந்து சுயவலு பெற்று விட்டால் அது அதீத தன்னம்பிக்கையை தந்து விடுவதோடு அந்த ஜாதகரின் வாய் வார்த்தையிலும் சூட்டினை ஏற்படுத்தி தடித்த வார்த்தைகளால் தனக்கு வரும் வாய்ப்புகளையே அந்த ஜாதகர் தானே கெடுத்துக் கொள்ளும்படி செய்து விடுவார்.
செவ்வாய் என்பது சுபத்துவம் பெற்றாலோ அல்லது நல்லவிதமான நிலைமைகளில் இருந்தாலோ அந்த ஜாதகர் உன்னதமான நிலையை தனது சொந்த உழைப்பிலிருந்தே அடைந்து விடுவார்.
செவ்வாயின் பரிபூரண ஆதரவூ பெற்றவர்கள் வாழ்நாளில் எப்படிப்பட்ட இன்னலில் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நல்லவிதமான வாழ்வில் செட்டிலாக உன்னதமான வாழ்க்கையை வாழ்வார்கள்.
ConversionConversion EmoticonEmoticon