இந்த காலத்தில் சினிமா தியேட்டர்களை விட கோவில்களில்தான் கூட்டம் திணறுகிறது.மக்களின் திடீர் பக்தியா அல்லது அத்தனை மக்களும் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார்களா என்று புரியவில்லை என்பார்கள் பலரும் இதனைப் பார்க்கும்போது.ஆனால் மக்கள் புத்திசாலிகள்.கோவில்களில் போய் கடவூளை தரிசித்து ஒரு லிஸ்ட்டை கொடுத்து விட்டால் எல்லாவற்றையூம் அவர் பார்த்துக் கொள்வார் என்று நம்புகிறார்கள்.பிரச்சனைகள் தீர்வதற்கும் வேண்டுகின்ற பொருட்களை குறிப்பாக ஆடம்பரப் பொருட்களை அடைவதற்கும் கடவூளைப் பார்த்து ஒரு ஹலோ சொல்லி விட்டால் போதும் என்று இதனை ஒரு ஷார்ட் கட் மெத்தட் ஆக நினைக்கிறார்கள்.
உண்மையில் பக்தி என்பது ஒரு வாழ்வியல் தத்துவம்.அது ஒரு வாழ்க்கை முறை.அது எப்போதும் நம்மிடம் இருக்க வேண்டும்.பிரச்சனைகள் என்பவை கிரகங்களால் ஆனவை.பூர்வஜென்ம வினைகளுக்கேற்ப அவை டிசைன் டிசைனாக வடிவமைக்கப்பட்டு உங்களது ஜாதகத்தில் பொருத்தப்பட்டிருப்பவை.அவற்றை கோவில்களுக்குச் செல்வதால் தீர்த்து விட முடியாது.
பின் என்ன பலன் கிடைக்கும் கோவில்களுக்கு செல்வதில் என்று கேட்டால் அதற்கான பதில் இதோ.
நீங்கள் குடியிருக்கும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டு தினமும் இரண்டு வேளை வீட்டிலுள்ள பூஜையறையில் அல்லது பூஜை செல்ஃப்பில் உள்ள கடவூளுக்கு சிறிதளவூ எதையேனும் நைவேத்தியம் செய்து விளக்கேற்றி வைத்தால் போதுமானது.
இது முதல் படி.
இதன் அடுத்த படிதான் கோவிலுக்குச் செல்வது.
எந்த கோவில்களுக்கு வேண்டுமானாலும் செல்லலாம்.வீட்டிற்கு அருகில் உள்ள கோவில்.பிரசித்தி பெற்ற பழமையான கோவில் என்று எந்த கோவில்களுக்குச் செல்லலாம்.
அப்படிச் செல்வதால் இரண்டு விதமான நன்மைகள் கிடைக்கும்.
ஒன்று உங்களுக்கு எந்த பிரச்சனைகள் ஜாதகரீதியாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கான மனப்பக்குவம் கிடைக்கும்.இரண்டாவது எந்த பிரச்சனை உங்களை போட்டு பாடாய்படுத்துகிறதோ அதன் காரணம் என்ன என்பதும் உங்களுக்கு தெரியவரும்.இது எப்படி தெரியவரும் என்றால் தினசரி உறங்கப்போகும்போது அந்த பிரச்சனையைப் பற்றி யோசித்துக் கொண்டே உறங்கிப் போய் விட்டால் 48 நாட்களுக்குள் அந்த பிரச்சனையின் விபரம் பற்றிய உங்களது கனவில் அல்லது யாருடைய சொற்களில் உங்களுக்கு தெரியவரும்.
ஆனால் அந்த பிரச்சனை தீராது.
அதற்குரிய சூட்சுமப்பரிகாரத்தை செய்தால் மட்டுமே பிரச்சனை தீரும்.பிரச்சனையூம் தீர்ந்து சந்தோஷமான வாழ்க்கையூம் கிடைக்கும்.
அதற்கு கோவில்களில் வழி இல்லை.
பரிகாரத்தால் மட்டுமே இது முடியூம்.கோவில்கள் என்பவை வழிதெரியாத திக்கற்றவர்களுக்கு ஒளி காட்டி வெளிச்சத்தை தரும் இடங்கள் மட்டுமே.
சூட்சுமப்பரிகாரம் மட்டுமே இதற்கு தீர்வூ.
அதனைத்தான் நாம் செய்து வருகிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon