கோச்சாரப் பலன் எழுதுபவர்கள் பொதுவாக சனி குரு ஆகிய இரண்டு கிரகங்களை வைத்துதான் பயம் காட்டுவார்கள்.இப்போது அதில் ராகு கேதுவையூம் சேர்த்துக் கொண்டார்கள்.இதில் சனி என்றால் எல்லோருக்கும் பயம்.காரணம் சனி ஒரு தண்டிக்கும் கிரகம்.விளக்கு போடுவது.விரதம் இருப்பது போன்ற அசட்டுத்தனமான லஞ்சங்களெல்லாம் சனி பகவானிடம் செல்லுபடியாகாது.தண்டனை என்றால் தண்டனைதான்.அத்தனை துல்லியமாக ஒருவரின் பூர்வபுண்ணிய டேட்டாபேஸை சனிபகவான் தன்னுடைய ஆபீஸில் மெயின்டெயின் பண்ணி வருகிறார்.அதனால்தான் சனி பாதகமான இடங்களில் வந்தமர்ந்தாலோ சனியின் பார்வை கொடுக்கும் கெடுபலன்களையூம் நினைத்து மகா சனங்கள் கலவரப்பட்டு விடுகிறார்கள்.
சரி சனிக்கு பரிகாரம் கிடையாதா என்று கேட்கலாம்.இருக்கிறது.அவற்றையெல்லாம் நமது மகரிஷிக்கள் மறைபொருளாக வைத்திருக்கிறார்கள்.இல்லையென்றால் இது போன்ற உயரிய பரிகாரங்களை அட்டைகளில் செம்புத்தகட்டில் எந்திரங்களை பெட்டிக்கடைகளில் கோவில் வாசலில் தொங்க விட்டு விற்பது போல மனுஷப்பயல்கள் சீப்பாக்கி விடுவார்கள் என்பதால்தான் அவர்கள் அப்படி மறைபொருளாக வைத்திருக்கிறார்கள்.இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் சனிக்கு பரிகாரம் என்றால் சனியின் குருவான ஸ்ரீபைரவரை வழிபடு.சிவப்புத்துணியில் மிளகை முடிந்து வைத்து ஞாயிறு ராகு காலத்தில் தீபமேற்றி வைத்து விட்டு வந்து விடு.சனியை பைரவர் பார்த்துக் கொள்வார் என்று சொல்வார்கள்.
ஸ்ரீபைரவருக்கு வேறு வேலை கிடையாதா? சனி அவரது சிஷ்யனாகவே இருந்தாலும் சனி ஒரு ஒழுக்க சீலர்.அப்படிப்பட்ட சிஷ்யனின் கடமையில் அவர் தலையிடுவாரா? வேலையில் சிரத்தையாக இருப்பவர்களைப் பார்த்து மேலதிகாரிகளே பயப்படுவது வழக்கம்.அது போலத்தான் சனியின் கடமையில் தலையிட்டால் அது தனக்கே கேடாக முடிந்து விடும் என்று ஸ்ரீபைரவருக்குத் தெரியாதா?
பின் எப்படி சனியின் கொடுமையிலிருந்து தப்புவது என்று கேட்கலாம்.
இதற்கு சில உபாயங்கள் உள்ள.
உங்களுக்கு திருமணத்தடை இருந்தால் அது சனியினால்தான் இருக்கிறது என்றால் அதனை பரிகாரத்தால் சரி செய்து விடலாம்.உங்களுக்கு தொழில் முடக்கம் இருந்தால் அது சனியால்தான் நேர்கிறது என்றால் அதனையூம் சரி செய்து விடலாம்.உங்களுக்கு தீராத வியாதி இருக்கிறது.அதுவூம் சனியால்தான் என்றால் அதனையூம் சரி செய்து விடலாம்.இவை தவிர வேறு எதையூம் பரிகாரத்தால் சனியிடமிருந்து சரி செய்ய முடியாது.
ஏனெனில் இவை ஒரு மனிதனின் வாழ்வாதாரம் பற்றியது.எந்த ஒரு மனிதனும் எவ்வளவூதான் பூர்வபுண்ணியத்தில் பாவமூட்டைகளைச் சேர்த்து வைத்திருந்தாலும் அவன் இந்த ஜென்மத்தில் நலமாக வளமாக வாழ்வதற்கு உரிமை இருக்கிறது.அதனால் அதனை பரிகாரத்தால் சரி செய்து விடலாம்.அப்படியானால் போன ஜென்மத்து பாவக்கணக்கு?
அது அடுத்த ஜென்மத்திற்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்படும்.அதற்குள் அடுத்த ஜென்மத்தில் யாராவது ஒரு நல்ல ஜோதிடர் உங்களுக்கு அமைந்து அப்போது அதற்குரிய பரிகாரத்தை செய்து விட்டால் அதுவூம் அடுத்தடுத்த ஜென்மங்களுக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டு விடும்.
இந்த வருடம் கட்ட வேண்டிய கடனை வாய்தா கேட்டுக் கொண்டு அடுத்த வருடம் கட்டி விடுகிறேன் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டால் விட்டு விடுவார்களல்லவா அது போல்தான் இதுவூம்.
உங்களது வாழ்க்கையில் என்னதான் கஷ்டங்களும் தீராத பிரச்சனைகளும் சுழற்றியடித்தாலும் அதனை உரிய சூட்சுமப்பரிகாரத்தினால் என்னால் தீர்த்து வைக்க முடியூம்.
விபரங்களுக்கு வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளுங்கள்.கட்டண விபரங்கள் மேலே உள்ளன.கட்டணத்தை செலுத்தி விட்டு ஜாதக நகலை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தால் உங்களுக்கான பரிகாரங்கள் அனுப்பி வைக்கப்படும்.
ConversionConversion EmoticonEmoticon