சிலர் சொல்வார்கள்.ஏன் எதுக்குன்னே தெரியாம எனக்கு மட்டும் புதுசு புதுசா பிரச்சனைங்க வந்துகிட்டே இருக்கு.வீட்டை விட்டு வெளியப் போனாலும் பிரச்சனை.சும்மா உட்கார்ந்திருந்தாலும் பிரச்சனை.வலிய வந்து வம்பு பண்ண ஆள் இருக்கு.என்ன பண்றதுன்னே தெரியலை.கிரகசாரத்தை நொந்துக்கறதா இல்லே நம்மை மட்டும் கண்டுக்காம இருக்கற கடவூளை நொந்துக்கிறதான்னு தெரியலைன்னு சொல்வாங்க.
இந்த மாதிரி அனுபவங்கள் எல்லாருக்கும் சில கால கட்டத்துல இருக்கும்.இதுக்கு முதல் காரணம் உங்களோட மனோபாவம்தான்.மனோபாவம்னு சொல்லிட்டாலே அதுக்கு காரணமான சந்திரன்தான் இதுக்கு காரணமாக இருக்கனும்.சில பேருக்கு அவங்களோட சந்திராஷ்ட தினங்கள்ல சொல்லி வைச்ச மாதிரி இந்த மாதிரியான புதுசு புதுசான பிரச்சனைங்க வந்து வரிசை கட்டி நிற்கும்.
சந்திராஷ்டம தினங்கள் மட்டுமில்லாம மற்ற நாட்கள்லயூம் இது மாதிரி பிரச்சனைங்க வரிசை கட்டி வருதுன்னா அதுக்கு பரிகாரத்தை அப்புறம் பார்த்துக்கலாம்.அதுக்கு முதல்ல இந்த மாதிரி பிரச்சனைகளை எதிர்கொள்கிற பக்குவம் புத்திசாலித்தனம் வேணும்.அதுக்கு ஒரே வழி புதன்கிரகத்தைப் பத்திரமாக பிடிச்சுக்கிறதுதான் இதுக்கு நல்ல தீர்வா இருக்கும்.
இது பிரச்சனையை எதிர்கொள்வதற்கான முதல்படிதான்.இன்னும் பல படிகள் இருக்கு.இப்போதைக்கு இதை மட்டும் தெரிஞ்சுக்கங்க.
பிரச்சனைங்க தினுசு தினுசாக வந்தால் புதனைப் பிடிச்சுக்கனும்.
ConversionConversion EmoticonEmoticon