கடவூள் அல்லது இயற்கை அல்லது பிரபஞ்சம் என்று எப்படி வேண்டுமானாலும் உங்கள் வசதிப்படி வைத்துக் கொள்ளுங்கள்.உங்களுக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது.அதுதான் உங்களை ஒரு மானிடராகப் பிறக்க வைத்திருக்கிறது என்று வைத்துக் கொண்டால் இதனை இப்படி யோசித்துப் பாருங்கள்.ஒரு தொழிலதிபர் இருக்கிறார்.அவரது தொழிற்கூடத்தில் பொருட்களை தயார் செய்கிறார்.அந்த பொருட்களை வேண்டுமென்றே கெட்டுப் போக வேண்டுமென்றும் மோசமானதாக இருக்க வேண்டும் அதே சமயம் சில பொருட்களை மட்டும் சூப்பராக இருக்க வேண்டுமென்றும் செய்வாரா? அவர் அந்த தொழிற் கூடத்தில் தரக்கட்டுப்பாட்டை வைத்திருப்பார்.எல்லா பொருட்களையூம் சமமான தரத்துடன் நீடித்து உழைக்கும்படியாகத்தானே தயார் செய்வார்.அப்போதுதானே அவர் ஒரு சிறந்த தொழிலபதிபர்.
இறை சக்தியூம் அப்படித்தான்.
மனிதர்களை தயார் செய்யூம்போது எல்லா மனிதர்களையூம் சமமான வாய்ப்புடன் சமமான திறனுடன் சமமான புத்திக்கூர்மையூடன்தான் தயார் செய்கிறார்.அப்புறம் சில பேர் அதிர்ஷ்க்காரர்கள் என்றும் சில பேர் துரதிர்ஷ்டக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்வது எப்படி?
அதிர்ஷ்டம் உள்ளவன் வாழ்க்கை ஓஹோ என்றும் அதிர்ஷ்டமில்லாதவன் வாழ்க்கை அவன் ஆயூள் முழுக்க வீண் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் ஒரு மித்.ஒரு மாயைதான்.
அப்படியானால் எங்கே தவறு வருகிறது?
பூர்வபுண்ணியம்?
பாக்கியஸ்தானம்?
பித்ருதோஷம்?
தனகாரகனான குருவின் அருள் இன்மை?
இவை எல்லாமே மனிதனால் கற்பனை செய்யப்பட்ட பயத்தை மனிதனுக்கு ஏற்படுத்தி அவனை காலம் காலமாக அடிமைப்படுத்த ஏற்பட்டிருக்கும் யூக்திகளே.
உண்மையில் ஒவ்வொருவரின் ஜாதகத்திலுள்ள எல்லா கிரகங்களும் நன்மை செய்வதற்காகத்தான் இருக்கிறது.அந்த நன்மைகளைப் பெறுவதற்கு ஒரே வழி நீங்கள் என்ன வேலை செய்பவராக இருந்தாலும் அதில் ஓபி அடிக்காமல் ஒழுங்காக திறம்பட வேலையை செய்து விடுவதுதான்.இது முதல் தகுதி.இறை நம்பிக்கை மற்றும் இறை வழிபாடு கூட இதற்கு அடுத்தபடிதான் வரும்.
அதன்பின்னர் நம்பிக்கை.
உங்கள் மீதும் உங்களது திறமையின் மீதும் உங்களது குடும்பத்தின் மீதும் உங்களது குரு அல்லது ஜோதிடர் மீதும் அதன் பின்னர் கடைசியாக கடவூளின் மீதும்.
இந்த நம்பிக்கைதான் உங்களது விடிவிளக்கு.
இந்த நம்பிக்கை இருந்தால்தான் உங்களது ஜாதகத்தின் மீது வெளிச்சம் படரும்.அப்போதுதான் உங்களது ஜாதகத்தில் எத்தனை குறைகள்(இதுவூம் ஒரு மாயையே) இருந்தHலும் உங்களை மேன்மைப்படுத்த பெரிய அளவில் வசதியாக வளமாக சொகுசாக வாழ வைப்பதற்கான வழிகள் உங்களது ஜாதகத்திலேயே இருக்கிறது என்பதை உங்களுக்கோ நீங்கள் பார்க்கிற ஜோதிடருக்கோ அவரது அகக்கண்களில் தெரியவரும்.
அதுவரை எத்தனை ஆயிரம் ஜோதிடர்களிடம் சென்றாலும் எத்தனை ஆயிரம் கோவில்களுக்குச் சென்றாலும் உங்களது வாழ்க்கை தேறாது.அப்படியேதான் இருக்கும்.
இப்போது புரிகிறதா?
வாழ்வூம் வளவூம் வெளியே இல்லை.அது கோவில்களிலும் இல்லை.உங்கள் ஜாதகத்தின் உள்ளேயேதான் இருக்கிறது.அதைக் கண்டுபிடித்துத் தருவதுதான் என் வேலை.அதைத்தான் இந்த நீண்ட நாற்பதாண்டு கால ஜோதிட ஆய்வின்படி செய்து வருகிறேன்.
உங்களுக்கு கொடுப்பினை(அதாவது அதிர்ஷ்டம்) இருந்தால் எனது பரிகாரம் உங்களுக்கு கிடைக்கும்.
ConversionConversion EmoticonEmoticon