கிரகங்கள் ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறும் என்பதுதான் நம் நாற்பதாண்டு கால நீண்ட ஆய்வின் கண்டுபிடிப்பு.ஒரு கிரகம் இன்னொரு கிரகமாக மாறும் என்றால் அப்படியே மாறி விடுவதில்லை.அந்த கிரகம் இன்னொரு கிரகத்தின் காரகத் தன்மையைப் பெற்றுக் கொண்டு அந்த இன்னொரு கிரகம் போலவே செயல்படத் துவங்கி விடும் என்பதுதான் நாம் சொல்ல வரும் விஷயம்.இதனை சாதாரணமாக ஒரு ஜாததகத்தைப் பார்ப்பதில் இருந்து கண்டுபிடிக்க முடியாது.அந்த ஜாதகரின் மனப்பாங்கு அவர் வசிக்கும் வீடு.அந்த வீட்டிலுள்ள பொருட்கள்.அவரது ஆபீஸின் அமைப்பு.அந்த ஆபீஸிலுள்ள பொருட்கள் இவற்றிலிருந்து கண்டறியலாம்.
ஒரு சின்ன உதாரணத்தை சொல்கிறேன் பாருங்கள்.
சுக்கிரன் செவ்வாயாக மாறும் அதிசயம்.
சுக்கிரன் செவ்வாய் இரண்டும் வேறு வேறு கிரகங்கள்.அவை ஒருபோதும் ஒன்றாக முடியாது.ஆனால் அவை எப்படி ஒரு ஜாதகரை பாடாய்படுத்தும் என்றால் தானாகவே அவை அந்த முடிவை எடுத்து விட முடியாது.அந்த ஜாதகர்தான் அந்த முடிவை எடுக்கிறார்.அந்த முடிவை எடுக்குமாறு அந்த ஜாதகரைத் துரண்டுவது அந்த ஜாதகரின் மனப்பாங்கு.அந்த மனப்பாங்கை தருவது அந்த ஜாதகரின் சந்திரன்.
ஆக சுக்கிரனை செவ்வாயாக மாற்றும் வித்தை அதாவது விந்தையை இங்கே செய்வது சந்திரன் என்றால் நகைப்புக்குரியதாக இருக்கும்.ஆனால் இப்படித்தான் நடக்கிறது.
இன்னும் புரியூம்படி சொல்கிறேன்.
ஒருவரது வீட்டில் புதிது புதிதாக சாமான் செட்டுகளை அவை ஆடம்பரப் பொருட்களாகட்டும் அத்தியாவசியப்பொருட்களாகட்டும்.அந்த ஜாதகர் அவற்றை வாங்கிச் சேர்க்க சேர்க்க அந்த வீட்டில் சுக்கிரனின் ஆதிக்கம் உள்ளே வருகிறது.ஒரு கால கட்டத்தில் அதாவது சில ஆண்டுகளில் அந்த ஆடம்பர மற்றும் அத்தியாவசிப் பொருட்கள் பழசாகிக் கொண்டே வரும்போது அவை சுக்கிரனின் காரகத்திலிருந்து விடுபட்டு செவ்வாயின் காரகத்தினை பெற்று விடுகின்றன.
முன்பெல்லாம் காரைக்குடி பக்கத்திற்கு சென்றால் வெள்ளை நிறத்தில் பளபளவென்று துடைத்து வைத்த ஆப்பிள் போல அம்பாசிடர் கார்கள் நிற்கும்.அத்தனையூம் டூரிஸ்ட் டாக்ஸிகள்.காரைக்குடிக்காரர்களிடம் ஒரு பழக்கம்.ஒரு புதிய அம்பாஸிடர் காரை வாங்கி ஒன்றரை ஆண்டுகள்தான் ஓட்டுவார்கள்.ஒன்றரை ஆண்டுகளில் சிறிதாக அந்த காரில் ரிப்பேர் செலவூ வந்து விட்டால் அதனை செகன்ட் கார் மார்க்கெட்டில் விற்று விட்டு மீண்டும் ஒரு புது அம்பாஸிடர் காரை கொண்டு வந்து ஓட்டுவார்கள்.இது அவர்கள் அறியாமல் செய்த ஜோதிடப் பரிகாரம்.
கார் என்பதே சுக்கிரன் செவ்வாய் காம்பினேஷனில் வருவது.புதிய சொகுசு கார் என்றால் அது சுக்கிரனின் காரகத்துவம் நிரம்பியது.அதே கார் பழசாகி விட்டால் அது செவ்வாயின் காரகத்துவத்தைப் பிரதிபலிக்கத் துவங்கி விடும்.செவ்வாய் செலவூ வைக்கும் கிரகம்.ஒரு சிலருக்குத்தான் அது ராசியாக இருக்கும்.
அதனால்தான் இப்போதெல்லாம் எல்லா பொருட்களையூம் பைபேக்கில் ஸ்;ராப் ரேட் என்றாலும் அதனை கொடுத்து விட்டு புதிய பொருட்களை பண்டிகை கால தள்ளுபடியில் வாங்கி விடும் பழக்கம் தெரிந்தோ தெரியாமலோ அதிகரித்து வருகிறது.
அதனால் வீட்டில் பழசு பரட்டைப் பொருட்கள் இருந்தால் அதனை வெளியே கடாசி விட்டு புதிய பொருட்களாக வாங்கி வையூங்கள்.செல்வம் கொழிக்கும்.
ConversionConversion EmoticonEmoticon