முன்பெல்லாம் எந்த விழாக்களுக்குச் சென்றாலும் மஞ்சப்பையைத்தான் தருவார்கள்.திருமணத்தாம்பூலத்தை மணமக்கள் பெயர் எழுதிய மஞ்சப்பையில்தான் போட்டுக் கொடுப்பார்கள்.ஜவூளிக்கடைகளுக்குச் சென்றாலும் மஞ்சப்பைதான்.புரொவிஷன் ஸ்டோர்களுக்குச் சென்றாலும் மஞ்சப்பைதான்.அந்த மஞ்சப்பையை அப்பாவி கிராமத்தானுக்கு அடையாளப்படுத்தி நம்ம ஆட்கள் கேவலமாகச் சித்தரித்ததும் உண்டு.இப்போது மஞ்சப்பையின் இடத்தை பிளாஸ்டிக் பைகள் பிடித்துக் கொண்டன.பிளாஸ்டிக் பைகளுக்கு தடை இருந்தாலும் தடிமனான பிளாஸ்டிக் பைகள் இப்போது மஞ்சப் பையை காணாமல் செய்து விட்டன.அது போல பணத்தை அது எவ்வளவூ பெரிய தொகையாக இருந்தாலும் அதனை தினத்தந்தி (தினமலரில் ஏதோ வைத்து கட்டமாட்டார்கள்) பேப்பரில் வைத்து பண்டலாகக் கட்டி அதனையூம் மஞ்சப்பையில் வைத்துதான் கொண்டு வருவார்கள்.
அந்த மஞ்சப்பை என்பது குருபகவானின் அடையாளம்.குரு பார்க்க கோடி நன்மை என்பது ஒரு பொதுவான நம்பிக்கை.அதனால் எங்கே மஞ்சப்பை கொண்டு செல்லப்படுகிறதோ அங்கெல்லாம் குருவின் பார்வை செலுத்தப்படுகிறது என்று பொருள்.அதனால்தான் அந்தக்காலத்தில் ஓரளவிற்கு வரதட்சணை சீர் செனத்தி போன்ற சுமைகள் இருந்தாலும் திருமணங்கள் எளிதாக நடந்தன.திருமணத் தகவல் மையங்களோ மாட்ரிமோனியல் வெப்சைட்களோ இல்லாமல் வரன்கள் எளிதாகக் கிடைத்துக் கொண்டிருந்தன.குழந்தை பிறப்பும் கருத்தரிப்பு மையங்கள் இல்லாமல் எளிதாக நடந்தன.நகையோ பொருளோ பாத்திர பண்டமோ மக்கள் நினைத்ததை சற்று காலதாமதமானாலும் வாங்கிக் கொள்ள முடிந்தது.அப்போதெல்லாம் ஈஎம்ஐ அழுத்தம் இல்லாமல் கைக்காசைப் போட்டு வாங்கிக் கொள்ள முடிந்தது.மிஞ்சிப் போனால் சீட்டு போட்டு பணத்தைத் தேற்றுவார்கள்.வாழ்க்கை என்பது சுமாராக இருந்தாலும் சுகமாக இருந்தது.ஒரு ரூபாய்க்கு ஊசி போடும் டாக்டரே அதற்கு மேல் எந்த வியாதியூம் வரவிடாமல் தடுத்த ஆரோக்கியத்தை பேணி விடுவார்.அவரைப் பார்க்கச் செல்லும்போதும் அதே மஞ்சப்பைதான் கையில் இருக்கும்.
இப்போது மஞ்சப்பை இல்லாத காரணத்தால் எல்லா இடத்திலும் குருப்பார்வை என்பதே இல்லாமல் போய் விட்டது.குருப்பார்வை இல்லாத காரணத்தால் முதலில் பணத்தட்டுப்பாடும் கடன் சுமையூம் ஏற்பட்டது.அப்புறம் நோய்நொடி திருமணத்தடை பிள்ளை பேற்றிற்குத் தடை என்று எல்லா விதத்திலும் மனித வாழ்க்கை என்பது சம்பாதித்து கடன் அடைக்க மட்டுமே என்றாகி விட்டது.
இதனையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அந்தக் காலத்தில் துணிப்பையை மஞ்சள் நிறத்தில் தயாரித்திருந்தனர்.அவர்கள் நினைத்திருந்தால் வேறு நிறத்தில் தயாரித்திருந்திருக்கலாம்.மஞ்சளின் மகிமை புரிந்து குருவின் மகத்துவம் புரிந்து மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தினார்கள்.
இப்போது பிளாஸ்டிக் பைகள் வந்து இடத்தை அடைத்துக் கொண்டு பூமியையூம் நாசம் செய்து கொண்டு சுபிட்சத்தை மக்கள் வாழ்வில் வர இயலாமல் செய்து கொண்டிருக்கின்றன.
பணம் வேண்டுமென்றால் குரு வேண்டும்.குருவின் அருள் சாதாரண மஞ்சளில் இருக்கிறது.இதை உணர்ந்தால் நல்லது.உணராவிட்டால் கடன் தரும் நிறுவனங்களுக்கும் கிரெடிட் கார்டு விற்று சம்பாதிக்கும் நிறுவனங்களுக்கும் நல்லது.
ConversionConversion EmoticonEmoticon