இது எனது ஜோதிட வாடிக்கையாளரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.அந்த மனிதர் நல்ல படிப்பு படித்தவர்.பெரிய கல்லுரரியில் பொறியியல் படிப்பு முடித்து பிரபல நிறுவனத்தில் பல இலக்க சம்பளம் வாங்கியவர்.மிகவூம் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொண்டவர்.அழகாக ஒரு குழந்தையூம் பிறந்தது.அதன் பின்னர்தான் அவரது வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக நரகமாகிக் கொண்டிருக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்ள இயலாமல் நிகழ்வூகள் நடக்க ஆரம்பித்தன.ஆசை மனைவியின் வார்த்தைகளில் நெருப்பு தெறித்தது.சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவர்களுக்குள் சண்டை வந்தது.வார்த்தைகள் தடிக்க கைகளை இவர் ஓங்கும் அளவிற்கு சென்றது.இப்படியே பத்து வருடங்களுக்கும் மேலாக சென்று விட்டது.ஒரு நாள் அவர்கள் பையன் படிக்கும் பள்ளிக் கூடத்திலிருந்து அவசர அழைப்பு வந்தபோதுதான் அந்த முதல் அதிர்ச்சி அவருக்கு காத்திருந்தது.
அவரது பையன் பார்க்க நோஞ்சானாக இருப்பான்.நெற்றி நிறைய திருநீறும் பக்தி சிரத்தையூமாக இருக்கும் பையன் அங்குள்ள காலிப்பசங்களுடன் சேர்ந்து கொண்டு முள்ளுக்காடு பக்கமாகப் போய் கஞ்சா அடித்து போலீசில் பிடிபடும் முன்னர் அதைப் பார்த்த உடற்பயிற்சி ஆசிரியர் காப்பாற்றி அழைத்து வந்து பிரின்ஸிபல் அறையில் மண்டி போட வைத்து விட்டார்.
அந்த நிகழ்வை பெரும் அவமானமாகக் கருதிய இந்த அன்பர் அதன்பின் தனது சொந்தப் பையனை வீட்டில் கைதி போல நடத்த ஆரம்பித்தார்.எப்போது பார்த்தாலும் ஒரு குயர் நோட்டில் எழுதி வைத்துக் கொள்ளும் அளவிற்கு அறிவூரைகளை வசன நடையில் பொழிந்து தள்ளுவார்.பையனை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருப்பார்.இதற்கிடையே சேலத்திற்கு மாற்றலாகிச் சென்று விட்டார்.இந்த தருணத்தில்தான் அந்த மாற்றம் நிகழ்ந்தது.
அவரது மனைவி தன்னை உதாசீனப்படுத்திய கணவனுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்ற எண்ணத்தில் பையனை அளவிற்கு அதிகமாக செல்லம் கொடுத்து அவன் பயன்பாட்டிற்கென்று தனியே கிரடிட் கார்டெல்லாம் வாங்கிக் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்.
பையன் இப்போது ப்ளஸ்டு முடித்து கல்லுரிக்கு சென்றிருக்க வேண்டியது.மறுபடியூம் தெருப்பசங்க சந்து முனையில் சுற்றும் காலிப்பசங்க என்று சகவாசம் எல்லை மீறிப்போய் இப்போது குடும்பதே வெறுப்பும் நெருப்புமாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு நிம்மதியின்றி நீ எப்படியாவது செத்துத் தொலை.உன்னை தலை முழுகினால் போதும் என்று ஒருவரை ஒருவர் சொல்லிக் கொண்டு நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் இந்த அன்பரைப் பார்த்து பரிதாபப்பட்ட அவரது துரரத்து உறவினர் என்னைப் பற்றி கேள்விப்பட்டு தொடர்பு கொண்டிருந்தார்.
அவர்கள் மூவரது ஜாதகங்களையூம் ஆராய்ந்த போது ஒரு விஷயம் முதலில் புரிபடவில்லை.கிரக அமர்வூகள் நன்றாகத்தான் இருந்தது.ஏதாவது செய்வினை தோஷமாக இருக்கப்போவூது நல்லாபாருங்க என்றார் அவர்.
வழக்கமான பூஜையில் அமர்ந்திருந்தபோதுதான் ஞாபகம் வந்தது.அவர் கொண்டு வந்திருந்த ஜாதகங்களில் மாந்தியின் நிலையை ஜாதகக் கட்டங்களில் குறிப்பிடாமல் இருந்தது.
பொதுவாக நம்ம ஊர்களில் மாந்தியைப் பற்றி கண்டு கொள்ள மாட்டார்கள்.கேரளாவில்தான் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
மூவரின் ஜாதகங்களிலும் மாந்தியின் நிலை கோளாறாக இருந்தது.அதிலும் அந்த கணவரின் ஜாதகத்தைப் பார்த்தபோது மாந்தியின் நிலை அவர் துர்ஆவிகளால் மனதளவில் பீடிக்கப்பட்டு அதன் பயனாகத்தான் வார்த்தையை நெருப்பாக் கொட்டியிருக்கிறார் என்று புரிந்து.அந்த பெண்ணின் ஜாதகத்திலும் மாங்கல்ய தோஷம் இருந்தது.அவர்களது பையனின் ஜாதகத்தில் குட்டிச் சுக்கிரன் கெட்டுப் போயிருந்தான்.
அதன் பின்னர் ஒரு மாதம் இவர்களுக்காக தீவீர ஆய்வினை செய்து இவர்கள் மூவருக்கும் துல்லியமான சூட்சுமப்பரிகாரத்தை அதற்குரிய கட்டணத்தை வாங்கிக் கொண்டு கொடுத்தனுப்பினேன்.
இப்போது அந்த குடும்பம் நன்றாக இருக்கிறது.
அந்த பையனும் இந்த வருடம் நீட் தேர்வில் பாஸாகி மருத்துவம் படிக்க சேர்ந்து விட்டான்.அந்த அன்பரும் அவர் மனைவியூம் இப்போது அன்னியோன்னியமாகவூம் புரிதலுடனும் வாழ்க்கை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ConversionConversion EmoticonEmoticon