இது ஒரு உலகியல் ஜோதிடப்பதிவூ.
கொஞ்சம் சுருக்கமாகவே நேரடியாகவே சொல்லி விடுகிறேன்.நமது நாட்டைப் பொறுத்தவரை மகர ராசியைத்தான் இந்தியா பிரதிபலிக்கும் என்பார்கள்.உழைப்பாளிகள் அடிமைகள் அதிகம் இருந்த தேசம் இது.கருப்பு நிற மக்களையூம் குறிப்பதால் சனி ஆதிக்கம் பெற்ற தேசம் என்றும் (தாழ்மையாகச் சொல்லவில்லை) எடுத்துக் கொள்ளலாம்.
இப்போது ஜிடிபி சதவீதம் வெகுவாகக் குறைந்து விட்டது.வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்து விட்டது.தொழில்துறை பெரும் அளவிற்கு நசிந்து போய் விட்டது.எங்கு பார்த்தாலும் யாரும் சுபிட்சமாக இல்லாமல் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் ஒரே காரணம்தான்.
அந்த காரணம் போக்குவரத்து நெரிசல்தான்.
போக்குவரத்து என்றதும் வண்டி வாகனங்களைக் குறிக்கும் செவ்வாயூம் சொகுசுக்கார்கள் லக்ஸரி வாகனங்களைக் குறிக்கும் சுக்கிரனும் தொழில்துறையிலும் முக்கியத்துவம் வகிப்பார்கள் என்பது உபசெய்தி.மெயின் செய்தியாக இங்கே வருவது ஒவ்வொரு டிராஃபிக் சிக்னலிலும் வாகனங்கள் (குறிப்பாக இப்போது டோல்களிலும்) வரிசையாக நின்று கொண்டிருக்க அந்த நேரங்களில் அந்த வாகனங்களில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விரையமாகிக் கொண்டிருக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் என்பதைப் பொதுவாக எண்ணைய் என்று குறிப்பிட்டோமானால் அந்த எண்ணையைக் குறிப்பது சனி கிரகம்தான்.அந்த சனி கிரகம் ஒவ்வொரு டிராஃபிக் சிக்னலிலும் விரையம் செய்யப்படுவதால் சனி என்பது நாட்டில் விரயபாவத்தில் வைக்கப்படுகிறது.அதனால் ராசிக்கு அதிபதி விரையத்திலேயே (12ம் இடம் என்று வேண்டுமானாலும் பொருள் கொள்க) வைத்திருக்கும்படி இருப்பதால்தான் செலவூகள் அதிகமாக வரவூகள் குறைந்து நாட்டில் பொருளாதார மந்த நிலையூம் ஏற்பட்டு பணப்பற்றாக்குறை மற்றும் தொழில் முடக்கம் ஏற்பட்டு எல்லாவற்றையூம் எல்லாரையூம் முடக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறது.
எனவே போக்குவரத்து சீரானால்தான் இந்த எல்லாவித மந்தநிலையூம் சீராகும்.
ConversionConversion EmoticonEmoticon